Showing posts with label maida. Show all posts
Showing posts with label maida. Show all posts

Thursday, 29 August 2013

கோவில்பட்டியில் பரோட்டா எதிர்ப்பு பேரணி!

கோவில்பட்டியில் பரோட்டா எதிர்ப்பு பேரணி!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளை மற்றும் பசுமை இயக்கத்தின் சார்பில் பரோட்டா எதிர்ப்பு பேரணி நடைபெற்றது.
கோவில்பட்டி காந்தி மைதானத்தில் இருந்து தொடங்கிய பேரணியில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணி 6 கி.மீ. தூரம் நடை பயணமாக சென்று புது அப்பனேரி கிராமத்தை அடைந்தது. ‘‘மைதா பொருட்களையும், அதிக பாதிப்பை ஏற்படுத்தும் பரோட்டாவையும் தவிர்ப்போம். இயற்கை உணவுப் பொருட்களான கம்பு, சோளம், தினை, காய்கறிகள் மற்றும் பழங்களை உண்போம்’’ என்று மாணவர்களும், ‘‘அபாயமான பரோட்டாவை தங்கள் குழந்தைகளுக்கு இனி கொடுப்பதில்லை’’ என்று பெற்றோர்களும் உறுதிமொழி எடுத்தனர்.

பேரணியின்போது, பரோட்டா குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் எல்லா வீடுகளிலும் ஒட்டப்பட்டது. பேரணியின் இறுதியில், மெகா சைஸில் தயாரிக்கப்பட்ட பரோட்டாவை குழி தோண்டி மூடினார்கள்.

இந்த பேரணி குறித்து பாரதியார் நினைவு அறக்கட்டளை நிறுவனர் முத்துமுருகன் கூறும்போது, ‘‘பரோட்டா என்பது மைதாவினால் செய்யப்படும் ஒரு உணவாகும். 2 ஆம் உலகப் போரின்போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையினால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் அதிகமாக பயன்படுத்த தொடங்கப்பட்டது.

அதில் இருந்து பரோட்டாவும் பிரபலம் அடைந்தது. நன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதில் ‘பனசாயல் பெரோசிடே’ என்னும் ரசாயனத்தை சேர்த்து வெண்மை நிறமாக்கி செய்யப்படுவதே மைதா எனப்படுகிறது. இது தவிர ‘அலோக்கான்’ என்ற ரசாயனம் கலந்து மைதா மாவு மிருதுவாக்கப்படுகிறது.

கோதுமை தீட்டப்படும் போதே 76 சதவீத வைட்டமின்களும், தாது பொருட்களும் நீக்கப்படுகின்றன. அதோடு 97 சதவீத நார்ச்சத்தும் களையப்படுகிறது. மைதாவில் செய்யும் கேக், இனிப்பு பொருட்கள் மற்றும் பரோட்டா ஜீரணத்திற்கு ஏற்றது அல்ல. இதில் நார்ச்சத்து இல்லை, நார்ச்சத்து இல்லாத உணவுகள் ஜீரணிக்க காலதாமதமாகும்.

மைதாவை சாப்பிடுவதால் இருதய கோளாறுகள், சிறுநீரக கோளாறு, சர்க்கரை நோய் ஏற்படும். கேரளாவில் மைதாவைப் பற்றி விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இங்கிலாந்து, சீனா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளில் மைதா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.(நன்றி:விகடன்)

புரோட்டா குறித்த எனது பதிவினை இங்கே பாருங்கள்

Sunday, 21 July 2013

உண்ணும் முன் ஒரு கணம் எண்ணுங்கள் - பரோட்டா

உண்ணும் முன் ஒரு கணம் எண்ணுங்கள் - பரோட்டா 

  
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
  அதனினும் அரிது கூன் குருடு செவிடு பேடி நீக்கிப்பிறத்தல்........

என்று தமிழ் மூதாட்டி ஒளவையார் பாடினார்.பெறுவதற்கு அரிய இந்த உடம்பை நாம் பேணிக்காக்க நமது முன்னோர்கள் சீரான உணவுப்பழக்க வழக்கங்களினை ஏற்படுத்தியிருந்தனர்.அதனால் தான் நோய் நொடி இல்லாமல் நீண்ட காலம் வாழ்ந்தனர்.தற்போது நாம் அதிலிருந்து விலகி தீமை தரும் உணவுகளினை சாப்பிடுகிறோம்.தமிழகம் எங்கும் இனிப்புக்கடைகளும் புரோட்டாக்கடைகளும் பெருகிவருகின்றன.அதன் விளைவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

எச்சரிக்கை!

தினமும் இரவு பரோட்ட சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா? அப்படியென்றால் ஆபத்தை விலைகொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.

இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறதுபரோட்டாகடை, அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .

பரோட்டாவின் கதை என்ன தெரியுமா ?

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். 

இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. வட மாநிலங்களில்ரொம்பவும் அரிது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால்,மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது. 

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?

மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு,அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.


இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது.

பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கப்படுகிறது, நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக்க பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பென்சாயில் பெராக்சைடு (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா. Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம் இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .

இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomottoபோன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .

இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல 

மைதாவில் நார் சத்து கிடையாது, நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் . எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும்


இதில் சத்துகள் எதுவும் இல்லை 

குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , 
எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakeryபண்டங்களை உண்ண தவிர்ப்பது நல்லது.

Europe union,UK,மற்றும் China ஆகிய நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .

மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல்,இருதய கோளறு, நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம். நம் தலைமுறையை காப்போம்.

நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை,கேழ்வரகு, கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .