Showing posts with label home garden. Show all posts
Showing posts with label home garden. Show all posts

Monday, 23 December 2013

"நீங்களே செய்து பாருங்கள்' வீட்டின் மாடியில் காய்கறித் தோட்டம்

"நீங்களே செய்து பாருங்கள்' வீட்டின் மாடியில் காய்கறித் தோட்டம்:-



வீட்டின் மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

"நீங்களே செய்து பாருங்கள்' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் முதல் கட்டமாக சென்னை மற்றும் கோவையில் புதன்கிழமை (டிச.18) தொடங்கப்பட்டது.

இதற்கான தொடக்க விழா வேளாண்துறை அமைச்சர் செ.தாமோதரன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இந்தத் திட்டத்தின் கீழ், வீட்டு மாடியில் தோட்டம் அமைக்கத் தேவையான காய்கறி விதைகள், உரங்கள், பாலிதீன் பைகள் உள்ளிட்டவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன.

என்னென்ன காய்கறிகள்: கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், அவரை, கொத்தவரை, முள்ளங்கி, கீரைகள், கொத்தமல்லி ஆகியவற்றை மாடி தோட்டத்தில் வளர்க்கலாம்.

இந்த செடிகள் அனைத்தையும் வளர்க்க மொட்டை மாடியில் 160 சதுர அடி இடம் இருந்தால் போதுமானது. இதற்கான மகசூல் காலம் 30 நாள்களில் இருந்து 6 மாதங்கள் வரை ஆகும்.

மாடித் தோட்டம் அமைப்பதன் மூலம் 1 கிலோ முதல் 15 கிலோ வரை காய்கறிகள் மற்றும் கீரைகளை மகசூலாகப் பெறலாம். இதற்கு தேவையான பொருள்கள் மானிய விலையில் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன.

மானியமாக கிடைக்கும் பொருள்கள்: 2 கிலோ தேங்காய் நார் கழிவுடன் கூடிய 20 பாலிதீன் பைகள், 9 வகையான காய்கறிகளின் விதைகள், 6 வகையான உரங்கள், மண் கரண்டி, மண் அள்ளும் கருவி, நீர்த் தெளிப்பான், பிளாஸ்டிக் பூவாளி, குழித்தட்டுகள் மற்றும் பாலிதீன் விரிப்புகள் உள்ளட்டவை மாடித் தோட்டம் அமைக்க தேவையான பொருள்களாகும்.

ரூ.2 ஆயிரத்து 414 மதிப்பு கொண்ட அந்த பொருள்களை, 50 சதவீத மானியத்தில் ரூ.1,207-க்கு தமிழக அரசு வழங்குகிறது. ஒரே நபருக்கு 5 முறை மானிய விலையில் தோட்டம் அமைக்கத் தேவையான மூலப் பொருள்கள் வழங்கப்படும்.

எங்கு அணுகுவது?: சென்னை - தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம், மாதவரம், சென்னை - 51. தொலைபேசி: 044 - 25554443.

கோவை - தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம், 8, தடாகம் சாலை, கோவை - 641013, தொலைபேசி: 0422 - 2453578.

www.tnhorticulture.tn.gov.in என்ற தோட்டக்கலைத் துறையின் இணையதளம் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம்.

முன்னதாக இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் அமைச்சர் தாமோதரன் பேசியது:

இந்தியாவில் காய்கறி உற்பத்தி அதிகரித்ததற்கு தமிழகத்தின் பங்கு மிக முக்கியமானது. உற்பத்தி திறனில் தேசிய அளவில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.

சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள நகரவாசிகள், தங்களுடைய வீட்டின் மொட்டை மாடியில் காய்கறித் தோட்டம் அமைப்பதற்காக ரூ.5 கோடி செலவில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை வெற்றி பெறச் செய்வதில் பெண்களுக்கு பெரும்பங்கு உள்ளது என்றார் அவர்.

மாடி தோட்டம் அமைக்கும் திட்டத்தின் தொடக்க விழாவில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி பேசியதாவது: இந்த திட்டம் சென்னை மற்றும் கோவையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு தேவையான உரங்களைத் தயாரிக்க சென்னையில் அதிக வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால் இங்கு உணவுக் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள், மக்கும் குப்பைகள் என அனைத்து விதமான குப்பைகளும் கிடைக்கின்றன.

இந்த திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த சென்னை மாநகராட்சி தனி கவனம் செலுத்தும் என்று மேயர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு

OPERATIONAL MANUAL Of DO IT YOURSELF KIT

INPUT DETAILS OF DO IT YOURSELF KIT

DO IT YOURSELF KIT - APPLY NOW

Monday, 9 September 2013

வீட்டுத்தோட்டம்

வீட்டுத்தோட்டம்:

வேதியியல் உரங்களினை பயன்படுத்தி விளைவிக்கப்படுகின்ற காய்கறிகளினை உண்பதால் பல்வேறு வகையிலான நோய்கள் ஏற்படுகின்றன.நகரமயமாதல்,பெருகி வரும் மக்கள் தொகை ஆகியவற்றின் காரணமாக மண்ணை மலடாக்கி விவசாயப்புரட்சி என்னும் பெயரில் சிறிது சிறிதாக இயற்கைவேளாண்மையிலிருந்து மாறி வேதியியல் உரங்களினை பயன்படுத்தி விவசாய்ப்பொருள்களான காய்கறிகள் பழங்கள் ஆகியவற்றினை விளைவிக்கின்றோம்.நம்மை நாமே அறியாமல் செடிகளுக்கு அடிக்கின்ற பூச்சிக்கொல்லி,உரங்கள் ஆகியவை அந்த காய்கறிகள்,பழங்கள் ஆகியவற்றில் சேர்ந்து நாம் உண்ணும் போது நம் நலத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன.

தமிழ்நாடு 2013-14 வேளாண்மை மானியக்கோரிக்கையில் நீங்களே செய்து பாருங்கள் என்ற ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி சென்னை மர்றும் கோவை மாநகரங்களில் புத்தம் புதிய நச்சுத்தன்மையற்ற சத்தான காய்கறிகளினை அவரவர் மாடிகளில் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க தொழில்நுட்ப அறிவுரையுடன் நீங்களே செய்து பாருங்கள்-சிறுதளைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.(வேளாண்மை மானியக்கோரிக்கை)

நகரங்களில் மண்தொட்டிகள் கிடைப்பது சிரமம் அதற்கு மாற்றாக HDPE GROW BAGS எனப்படும் பிளாஸ்டிக் பைகள் சந்தையில் வெவ்வேறு அளவுகளில் தேவைக்குதக்கவாறு கிடைக்கிறது.மேலும் மண் கிடைப்பது சிரமம் ஆதலால் அதற்கும் மாற்றாக தென்னைநார் கழிவு மண்புழு உரம் கலந்து பயன்படுத்துதல் எளிதானது.எடை குறைவானது.தென்னைநார் கழிவு நன்கு அமுக்கப்பட்டு அதனைச்சேர்த்தே HDPE GROW BAGS சந்தைகளில் கிடைக்கிறது.அதனை பயன்படுத்தலாம்.

மாசற்ற காய்கறிகள் உண்ணவேண்டும் என்பதற்காக HDPE GROW BAGS மூலம் என் வீட்டின் மேல்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத்தோட்டமும் என்வீட்டினைச்சுற்றி அமைக்கப்பட்டுள்ள தாவரங்களும் தற்போது சிறிது சிறிதாக காய்கறிகள் வெளியே வாங்குவதினை குறைத்து வருகின்றன
வீட்டின் மேல்பகுதியில் வளர்க்கப்பட்டு வரும் செடியில் காய்க்கத்துவங்கியுள்ள பாகல்
வீட்டின் மேல்பகுதியில் வளர்க்கப்பட்டு வரும் செடியில் காய்க்கத்துவங்கியுள்ள பீர்க்கன்
வீட்டின் மேல்பகுதியில் வளர்க்கப்பட்டு வரும் செடியில் காய்க்கத்துவங்கியுள்ள பாகல்

தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்பாட்டில்களில் வளர்க்கப்படும் சிறு பூச்செடிகள்
தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்பாட்டில்களில் வளர்க்கப்படும் மணிபிளாண்ட்
தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்பாட்டில்களில் வளர்க்கப்படும் ஓமவல்லி அல்லது கற்பூரவல்லி
தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்பாட்டில்களில் வளர்க்கப்படும் அழகுச்செடி
தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்பாட்டில்களில் பிரிதொரு முறையில்வளர்க்கப்படும் அழகுச்செடி
தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்பாட்டில்களில் பிரிதொரு முறையில்வளர்க்கப்படும் அழகுச்செடி

மாடிதோட்டத்தில் வளர்க்கப்பட்டுவரும் அவரைச்செடி பூக்க காய்க்கத்துவங்கியுள்ளது

மாடித்தோட்டத்தில் செடிகளின் அணிவகுப்பு
பயன்படுத்தப்படாத வாளியில் வளர்க்கப்படும் ரோஸ் செடி பூக்கத்துவங்கியுள்ளது

நந்தியாவட்டைச்செடி பூக்களுடன்
கேரட் மற்றும் சிறுகிழங்கு
கேரட் நன்கு விளைந்தநிலையில்

மிளகாய் பூக்க,காய்க்கத்துவங்கியுள்ளது
கத்தரி காய்க்க தயாரான நிலையில்
பீட்ரூட் அறுவடைக்கு தயாரான நிலையில்

வீட்டுத்தேவைக்கான அரைக்கீரை முளைவிடதுவங்கியுள்ளது
புதினா நன்கு வளர்ந்த நிலையில்
பொன்னாங்கண்ணி கீரை அறுவடைக்கு தயார்
கீரைவகைகளின் அணிவகுப்பு
வீட்டின் முன்புறம் வைக்கப்பட்டுள்ள மரம் பூத்து குலுங்குகிறது
வீட்டின் முன்புறம் வைக்கப்பட்டுள்ள மரம் பூத்து குலுங்குகிறது
குளிர் காற்றினை தரக்கூடிய முள்ளில்லா மூங்கில்
நீரின் கடினத்தன்மை நீக்க வெட்டிவேர்
வெட்டிவேரின் அணிவகுப்பு
மங்குஸ்தான் பழமரம் 
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவல்ல இன்சுலின் செடி
செவ்வெளனி

மாமரம் பூக்கத்துவங்கியுள்ளது
சப்போட்டா 
இன்சுலின் செடி
பவளமல்லிசெடி
எளிய முறையிலான சொட்டு நீர் பாசன அமைப்பு
தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்பாட்டில் சொட்டு நீர் அமைப்பாக
தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்பாட்டில் சொட்டு நீர் அமைப்பாக
சமையலறைக்கழிவு நீர் செல்லும் பாதையில் நீர்ன் கடினத்தன்மை அகற்ற கல்வாழை மற்றும் வெட்டிவேர்

தூக்கி வீசி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களில் சிறு பறவைகளுக்காக தானியங்கள்
தூக்கி வீசி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களில் பிறிதொரு முறையில் சிறு பறவைகளுக்காக தானியங்கள்
 நீங்களும் உங்கள் தேவைக்கான காய்கறிகளினை மாசற்ற கலப்படமில்லா காய்கறிகளினை தயார் செய்து கொள்ளலாமே...
முயன்றால் முடியாதது ஏதுமில்லை.
முயற்சியுங்களேன்