மரபணு மாற்றபட்ட விதைகளினை களப்பரிசோதனை செய்ய அனுமதி:-
மரபணு மாற்றபட்ட விதைகளின் களப்பரிசோதனைக்கு இந்தியாவில் இருந்து வந்த தடையை திடீர் என்று நீக்கி, கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டிருக்கிறார், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி.இதையடுத்து, 200 விதமான பயிர்களின் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கான பரிசோதனை களமாக இந்தியா மாறியிருக்கிறது.இந்த விஷயம் நாடுமுழுக்க இருக்கும் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் இயற்கை விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக திருமதி ஜெயந்தி நடராஜன் இருந்தபோது மரபணு மாற்றபட்ட விதைகளின் களப்பரிசோதனைக்கு தடை விதித்திருந்தார்.அந்த தடை தான் தற்போது விலக்கப்பட்டுள்ளது.
மரபணு மாற்றப்பட்ட விதைகள் என்பவை, இயற்கைச் சூழலை சிதைப்பவை. பாரம்பரியமாக இருக்கும் விதைகளையெல்லாம் ஒழித்துவிட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் விதைகளை மட்டுமே விவசாயிகள் வாங்க வேண்டும் என்கிற கட்டாயத்தை ஏற்படுத்துவதற்காகவே... மரபணு மாற்றப்பட்ட விதைகள் இங்கே திணிக்கப்படுகின்றன.
ஏற்கெனவே 260 மில்லியன் டன் உணவு உற்பத்தி இங்கே நடக்கிறது. இதுவே இந்தியாவின் தேவைக்கு போதுமானதாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், உற்பத்தியை பெருக்குவதற்காகத்தான் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு அனுமதி என்று சொல்வது... கேலிக்குரியது.
மரபணு மாற்றப்பட்ட விதைகள், மனித உயிர்களுக்கு கேடு விளைவிப்பவை. எனவே இவற்றை இந்தியாவில் அனுமதிப்பது என்பது, இந்தியர்களின் உயிருக்கு உலை வைப்பதற்கு சமம்.
ஆனால், இது எதையும் கவனத்தில் கொள்ளாமல், அனுமதி கொடுத்திருக்கின்றார் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி.
மரபணு பொறியியல் ஒப்புதல் குழுவால் (Genetic Engineering Appraisal Committee) கடந்த மார்ச்மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் அரிசி, கோதுமை, சோளம், ஆமணக்கு, பருத்தி, மேலும் 200 க்கும் மேற்பட்ட பயிர்களின் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கான பரிசோதனை செய்ய தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் முதல் அமுலுக்கு வந்த மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், மத்திய அரசால் கள பரிசோதனை செய்ய வழங்கப்பட்ட அனுமதி, அவர்கள் ஒப்புதல் கொடுத்த ஆண்டில் நடத்தப்பட வில்லை என்றாலும் கூட, அடுத்தடுத்த ஆண்டுகளில் செல்லத்தக்கது என்றும் ஆனால் மாநில அரசு தடையில்லாச்சான்று கொடுத்தால் மட்டுமே களப்பரிசோதனை செய்ய இயலும்.
பஞ்சாப், அரியானா , மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற சில மாநிலங்களில் களப்பரிசோதனை மேற்கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. தற்போது, அரசாங்கம் பிடி பருத்தியில் ( மரபணு மாற்றப்பட்ட பருத்தி ) வணிக ரீதியான உற்பத்தி அனுமதிக்கிறது . பிடி கத்தரிக்காய் அதன் கள பரிசோதனையில் வெற்றி பெற்றது என்றாலும், சமூக குழுக்களினால் ஏற்பட்ட வலுவான எதிர்ப்புக்கள் காரணமாக வணிக ரீதியிலான உற்பத்தி மேற்கொள்ள மத்திய அரசின் அனுமதி அளிக்கப்படவில்லை
ஒன்று படுவோம் போராடுவோம் மரபணு மாற்றப்பட்ட விதைகளினை அனுமதியோம்....
எதிர்ப்பினை இங்கே பதிவு செய்யுங்கள்
அரசியல் கட்சி மற்றும் அரசியல்வாதிகளுடன் Tweet செய்யுங்கள் இங்கிருந்து நேரிடையாக
No comments:
Post a Comment