Saturday 28 September 2013

குப்பை பொறுக்குபவர் (Rag Pickers) - ஒரு பார்வை

குப்பை பொறுக்குபவர்

குப்பை பொறுக்குபவர் என தமிழிலும் ரேக்பிக்கர்ஸ் என ஆங்கிலத்திலும் அழைக்கப்படுபவர்கள் தெரிந்தோ தெரியாமலோ நம் சுற்றுப்புறத்தினை காக்க உதவுகிறார்கள் என்றால் அது மிகையில்லை.நீண்ட பை ஒன்றை வைத்துக்கொண்டும் கையில் சிறு முனை வளைந்த கம்பியினை வைத்துக்கொண்டும் தெருத்தெருவாக செல்லும் இவர்கள் தெருவில் கிடக்கும் மறு சுழற்சிக்கு உதவும் பொருள்களினை எடுத்துச்சென்று பழைய பொருள்கள் வாங்கும் கடைக்காரர்களிடம் விற்று பிழைப்பு நடத்துகின்றார்கள்.

ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் சிறுமியர் என அனைவரும் இந்த தொழில்கள் மேற்கொண்டு வருகின்றனர்.தினமும் சுமார் 60 ரூபாயிலிருந்து 250 ரூபாய் வரையிலும் தெருவில் கிடக்கும் மறு சுழற்சிக்கு உதவும் பொருள்களினை சேகரித்து விற்பனை செய்கின்றனர்.

கண்ணாடி பாட்டில்கள் மட்டுமே எடுக்கின்ற நபர்களும் உள்ளனர்,பிளாஸ்டிக் பாட்டிகள் மட்டுமே எடுக்கின்ற நபர்களும் உள்ளனர்,அனைத்து வகை பொருள்களும் எடுக்கின்ற நபர்களும் உள்ளனர்,மனித தலைமுடிமட்டுமே சேகரிக்கும் நபர்களும் உள்ளனர்.ஆனால் இவர்கள் படும் பாடு கொஞ்சம் நஞ்சம் அல்ல.ஏளனப்பேச்சுக்களும்,விரட்டியடிப்புகளும் அதிகளவிற்கு ஆட்படுவர்கள் இவர்களே.ஆனால் சுற்றுப்புறத்தினை மாசு படுத்தும் நம்மைபோன்றவர்களிடமிருந்து சுற்றுப்புறத்தினை பாதுகாப்பது இவர்கள் இந்த தேசத்துக்கு செய்யும் மிகப்பெரிய பணியாகும்.

வீட்டில் சேரும் குப்பைகளினை தனித்தனியாக பிரித்து அதாவது மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து மக்காத குப்பைகளினை இவர்களினைப்போல் உள்ள நபர்களிடம் கொடுத்து சுற்றுப்புறத்தினை பாதுகாக்க நம்மால் முடிந்த உதவியினை செய்வோம்.தேசத்தினைக்காப்போம்.

எதிர்கால சந்ததியினருக்கு இயற்கைவளங்களினை விட்டுச்செல்வோம்.

மறுசுழற்சி குப்பைகளினை எடுக்க தேடிச்செல்லும் நபர்


மறுசுழற்சி குப்பைகளினை எடுக்க தேடிச்செல்லும் நபர்

குப்பைத்தொட்டியில் மறுசுழற்சி குப்பைகளினை எடுக்கும் பெண்மணி

மறுசுழற்சி குப்பைகளினை எடுக்க தேடிச்செல்லும் பெண்மணி
மறுசுழற்சி குப்பைகளினை எடுக்க தேடிச்செல்லும் நபர் கையில் முனை வளைந்த கம்பியுடன்
மறுசுழற்சி குப்பைகளினை எடுக்கும் நபர்
மறுசுழற்சி குப்பைகளினை எடுக்கும் நபர்
குப்பைகொட்டப்படும் இடங்களில் மறுசுழற்சி குப்பைகளினை எடுக்கும் பெண்மணிகள்










Monday 9 September 2013

பிளாஸ்டிக் என்னும் எமன்....

பிளாஸ்டிக் என்னும் எமன்....


எங்கெங்கு காணினும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள்,பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள்.முன்பெல்லாம் கடைக்கு செல்கையில் மஞ்சள் துணிப் பையினை தூக்கிச்செல்வோம் ஆனால் வீசிய கையாக வெறுங்கையுடன் போய் பிளாஸ்டிக் கேரி பேக்குகளில் பொருள்களினை வாங்கி வந்து அதனை அப்படியே வீசி விடுகின்றோம்.வெளியூருக்குச்செல்வதாக இருந்தால் முன்பெல்லாம் குடிநீரினை எடுத்துச்செல்வோம்.ஆனால் இன்று பாட்டில் பாட்டிலாக குடிநீரினை வாங்கி குடுத்து அந்த பிளாஸ்டிக்பாட்டில்களினை தூக்கி எறிந்து செல்கின்றோம்.இதனால் சுற்றுப்புறம் கெடுவதுடன் உயிரின சுழற்சி தடைபடுவதற்கு காரணமாக அமைகிறோம்.

முடிந்த அளவிற்கு பிளாஸ்டிக் கேரி பேக்குகளின் உபயோகத்தினை குறைப்போம்,தவிர்ப்போம்

பிளாஸ்டிக் பாட்டில்களினை மறு உபயோகப்படுத்துவோம்

முடிந்தவரை மறுசுழற்சிக்கு உட்படுத்துவோம்...

உயிரினசுழற்சியினை பாதுகாக்க நம்மால் முடிந்த வரை உதவுவோம்...

என்னால் முடிந்தவரை பிளாடிக்பாட்டிலின் மறு பயன்பாடு இதோ

பயன்படுத்த இயலாத பிளாஸ்டிக் வாளியில் ரோஸ் செடி
தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டிலில் தானியங்கள் சிறு பறவைகளுக்கு உணவுக்காக
தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டிலில் பிரிதொரு முறையில் தானியங்கள் சிறு பறவைகளுக்கு உணவுக்காக
தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களில் சிறு பூச்செடிகள் 
தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களில் மணிபிளாண்ட்
தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களில் கற்பூரவல்லி 
தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களில் பிரிதொரு முறையில் சிறு பூச்செடிகள்
தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களில் பிரிதொரு முறையில் சிறு பூச்செடிகள்
தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களில் அழகு தாவரங்கள்
தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டிலினைக்கொண்டு எளிதான சொட்டுநீர்பாசனம்
தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டிலினைக்கொண்டு எளிதான சொட்டுநீர்பாசனம்

வீட்டுத்தோட்டம்

வீட்டுத்தோட்டம்:

வேதியியல் உரங்களினை பயன்படுத்தி விளைவிக்கப்படுகின்ற காய்கறிகளினை உண்பதால் பல்வேறு வகையிலான நோய்கள் ஏற்படுகின்றன.நகரமயமாதல்,பெருகி வரும் மக்கள் தொகை ஆகியவற்றின் காரணமாக மண்ணை மலடாக்கி விவசாயப்புரட்சி என்னும் பெயரில் சிறிது சிறிதாக இயற்கைவேளாண்மையிலிருந்து மாறி வேதியியல் உரங்களினை பயன்படுத்தி விவசாய்ப்பொருள்களான காய்கறிகள் பழங்கள் ஆகியவற்றினை விளைவிக்கின்றோம்.நம்மை நாமே அறியாமல் செடிகளுக்கு அடிக்கின்ற பூச்சிக்கொல்லி,உரங்கள் ஆகியவை அந்த காய்கறிகள்,பழங்கள் ஆகியவற்றில் சேர்ந்து நாம் உண்ணும் போது நம் நலத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன.

தமிழ்நாடு 2013-14 வேளாண்மை மானியக்கோரிக்கையில் நீங்களே செய்து பாருங்கள் என்ற ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி சென்னை மர்றும் கோவை மாநகரங்களில் புத்தம் புதிய நச்சுத்தன்மையற்ற சத்தான காய்கறிகளினை அவரவர் மாடிகளில் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க தொழில்நுட்ப அறிவுரையுடன் நீங்களே செய்து பாருங்கள்-சிறுதளைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.(வேளாண்மை மானியக்கோரிக்கை)

நகரங்களில் மண்தொட்டிகள் கிடைப்பது சிரமம் அதற்கு மாற்றாக HDPE GROW BAGS எனப்படும் பிளாஸ்டிக் பைகள் சந்தையில் வெவ்வேறு அளவுகளில் தேவைக்குதக்கவாறு கிடைக்கிறது.மேலும் மண் கிடைப்பது சிரமம் ஆதலால் அதற்கும் மாற்றாக தென்னைநார் கழிவு மண்புழு உரம் கலந்து பயன்படுத்துதல் எளிதானது.எடை குறைவானது.தென்னைநார் கழிவு நன்கு அமுக்கப்பட்டு அதனைச்சேர்த்தே HDPE GROW BAGS சந்தைகளில் கிடைக்கிறது.அதனை பயன்படுத்தலாம்.

மாசற்ற காய்கறிகள் உண்ணவேண்டும் என்பதற்காக HDPE GROW BAGS மூலம் என் வீட்டின் மேல்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத்தோட்டமும் என்வீட்டினைச்சுற்றி அமைக்கப்பட்டுள்ள தாவரங்களும் தற்போது சிறிது சிறிதாக காய்கறிகள் வெளியே வாங்குவதினை குறைத்து வருகின்றன
வீட்டின் மேல்பகுதியில் வளர்க்கப்பட்டு வரும் செடியில் காய்க்கத்துவங்கியுள்ள பாகல்
வீட்டின் மேல்பகுதியில் வளர்க்கப்பட்டு வரும் செடியில் காய்க்கத்துவங்கியுள்ள பீர்க்கன்
வீட்டின் மேல்பகுதியில் வளர்க்கப்பட்டு வரும் செடியில் காய்க்கத்துவங்கியுள்ள பாகல்

தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்பாட்டில்களில் வளர்க்கப்படும் சிறு பூச்செடிகள்
தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்பாட்டில்களில் வளர்க்கப்படும் மணிபிளாண்ட்
தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்பாட்டில்களில் வளர்க்கப்படும் ஓமவல்லி அல்லது கற்பூரவல்லி
தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்பாட்டில்களில் வளர்க்கப்படும் அழகுச்செடி
தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்பாட்டில்களில் பிரிதொரு முறையில்வளர்க்கப்படும் அழகுச்செடி
தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்பாட்டில்களில் பிரிதொரு முறையில்வளர்க்கப்படும் அழகுச்செடி

மாடிதோட்டத்தில் வளர்க்கப்பட்டுவரும் அவரைச்செடி பூக்க காய்க்கத்துவங்கியுள்ளது

மாடித்தோட்டத்தில் செடிகளின் அணிவகுப்பு
பயன்படுத்தப்படாத வாளியில் வளர்க்கப்படும் ரோஸ் செடி பூக்கத்துவங்கியுள்ளது

நந்தியாவட்டைச்செடி பூக்களுடன்
கேரட் மற்றும் சிறுகிழங்கு
கேரட் நன்கு விளைந்தநிலையில்

மிளகாய் பூக்க,காய்க்கத்துவங்கியுள்ளது
கத்தரி காய்க்க தயாரான நிலையில்
பீட்ரூட் அறுவடைக்கு தயாரான நிலையில்

வீட்டுத்தேவைக்கான அரைக்கீரை முளைவிடதுவங்கியுள்ளது
புதினா நன்கு வளர்ந்த நிலையில்
பொன்னாங்கண்ணி கீரை அறுவடைக்கு தயார்
கீரைவகைகளின் அணிவகுப்பு
வீட்டின் முன்புறம் வைக்கப்பட்டுள்ள மரம் பூத்து குலுங்குகிறது
வீட்டின் முன்புறம் வைக்கப்பட்டுள்ள மரம் பூத்து குலுங்குகிறது
குளிர் காற்றினை தரக்கூடிய முள்ளில்லா மூங்கில்
நீரின் கடினத்தன்மை நீக்க வெட்டிவேர்
வெட்டிவேரின் அணிவகுப்பு
மங்குஸ்தான் பழமரம் 
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவல்ல இன்சுலின் செடி
செவ்வெளனி

மாமரம் பூக்கத்துவங்கியுள்ளது
சப்போட்டா 
இன்சுலின் செடி
பவளமல்லிசெடி
எளிய முறையிலான சொட்டு நீர் பாசன அமைப்பு
தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்பாட்டில் சொட்டு நீர் அமைப்பாக
தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்பாட்டில் சொட்டு நீர் அமைப்பாக
சமையலறைக்கழிவு நீர் செல்லும் பாதையில் நீர்ன் கடினத்தன்மை அகற்ற கல்வாழை மற்றும் வெட்டிவேர்

தூக்கி வீசி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களில் சிறு பறவைகளுக்காக தானியங்கள்
தூக்கி வீசி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களில் பிறிதொரு முறையில் சிறு பறவைகளுக்காக தானியங்கள்
 நீங்களும் உங்கள் தேவைக்கான காய்கறிகளினை மாசற்ற கலப்படமில்லா காய்கறிகளினை தயார் செய்து கொள்ளலாமே...
முயன்றால் முடியாதது ஏதுமில்லை.
முயற்சியுங்களேன்