Saturday, 28 September 2013

குப்பை பொறுக்குபவர் (Rag Pickers) - ஒரு பார்வை

குப்பை பொறுக்குபவர்

குப்பை பொறுக்குபவர் என தமிழிலும் ரேக்பிக்கர்ஸ் என ஆங்கிலத்திலும் அழைக்கப்படுபவர்கள் தெரிந்தோ தெரியாமலோ நம் சுற்றுப்புறத்தினை காக்க உதவுகிறார்கள் என்றால் அது மிகையில்லை.நீண்ட பை ஒன்றை வைத்துக்கொண்டும் கையில் சிறு முனை வளைந்த கம்பியினை வைத்துக்கொண்டும் தெருத்தெருவாக செல்லும் இவர்கள் தெருவில் கிடக்கும் மறு சுழற்சிக்கு உதவும் பொருள்களினை எடுத்துச்சென்று பழைய பொருள்கள் வாங்கும் கடைக்காரர்களிடம் விற்று பிழைப்பு நடத்துகின்றார்கள்.

ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் சிறுமியர் என அனைவரும் இந்த தொழில்கள் மேற்கொண்டு வருகின்றனர்.தினமும் சுமார் 60 ரூபாயிலிருந்து 250 ரூபாய் வரையிலும் தெருவில் கிடக்கும் மறு சுழற்சிக்கு உதவும் பொருள்களினை சேகரித்து விற்பனை செய்கின்றனர்.

கண்ணாடி பாட்டில்கள் மட்டுமே எடுக்கின்ற நபர்களும் உள்ளனர்,பிளாஸ்டிக் பாட்டிகள் மட்டுமே எடுக்கின்ற நபர்களும் உள்ளனர்,அனைத்து வகை பொருள்களும் எடுக்கின்ற நபர்களும் உள்ளனர்,மனித தலைமுடிமட்டுமே சேகரிக்கும் நபர்களும் உள்ளனர்.ஆனால் இவர்கள் படும் பாடு கொஞ்சம் நஞ்சம் அல்ல.ஏளனப்பேச்சுக்களும்,விரட்டியடிப்புகளும் அதிகளவிற்கு ஆட்படுவர்கள் இவர்களே.ஆனால் சுற்றுப்புறத்தினை மாசு படுத்தும் நம்மைபோன்றவர்களிடமிருந்து சுற்றுப்புறத்தினை பாதுகாப்பது இவர்கள் இந்த தேசத்துக்கு செய்யும் மிகப்பெரிய பணியாகும்.

வீட்டில் சேரும் குப்பைகளினை தனித்தனியாக பிரித்து அதாவது மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து மக்காத குப்பைகளினை இவர்களினைப்போல் உள்ள நபர்களிடம் கொடுத்து சுற்றுப்புறத்தினை பாதுகாக்க நம்மால் முடிந்த உதவியினை செய்வோம்.தேசத்தினைக்காப்போம்.

எதிர்கால சந்ததியினருக்கு இயற்கைவளங்களினை விட்டுச்செல்வோம்.

மறுசுழற்சி குப்பைகளினை எடுக்க தேடிச்செல்லும் நபர்


மறுசுழற்சி குப்பைகளினை எடுக்க தேடிச்செல்லும் நபர்

குப்பைத்தொட்டியில் மறுசுழற்சி குப்பைகளினை எடுக்கும் பெண்மணி

மறுசுழற்சி குப்பைகளினை எடுக்க தேடிச்செல்லும் பெண்மணி
மறுசுழற்சி குப்பைகளினை எடுக்க தேடிச்செல்லும் நபர் கையில் முனை வளைந்த கம்பியுடன்
மறுசுழற்சி குப்பைகளினை எடுக்கும் நபர்
மறுசுழற்சி குப்பைகளினை எடுக்கும் நபர்
குப்பைகொட்டப்படும் இடங்களில் மறுசுழற்சி குப்பைகளினை எடுக்கும் பெண்மணிகள்










No comments:

Post a Comment