வீட்டுத்தோட்டம்:
நீங்களும் உங்கள் தேவைக்கான காய்கறிகளினை மாசற்ற கலப்படமில்லா காய்கறிகளினை தயார் செய்து கொள்ளலாமே...
முயன்றால் முடியாதது ஏதுமில்லை.
முயற்சியுங்களேன்
வேதியியல் உரங்களினை பயன்படுத்தி விளைவிக்கப்படுகின்ற காய்கறிகளினை உண்பதால் பல்வேறு வகையிலான நோய்கள் ஏற்படுகின்றன.நகரமயமாதல்,பெருகி வரும் மக்கள் தொகை ஆகியவற்றின் காரணமாக மண்ணை மலடாக்கி விவசாயப்புரட்சி என்னும் பெயரில் சிறிது சிறிதாக இயற்கைவேளாண்மையிலிருந்து மாறி வேதியியல் உரங்களினை பயன்படுத்தி விவசாய்ப்பொருள்களான காய்கறிகள் பழங்கள் ஆகியவற்றினை விளைவிக்கின்றோம்.நம்மை நாமே அறியாமல் செடிகளுக்கு அடிக்கின்ற பூச்சிக்கொல்லி,உரங்கள் ஆகியவை அந்த காய்கறிகள்,பழங்கள் ஆகியவற்றில் சேர்ந்து நாம் உண்ணும் போது நம் நலத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன.
தமிழ்நாடு 2013-14 வேளாண்மை மானியக்கோரிக்கையில் நீங்களே செய்து பாருங்கள் என்ற ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி சென்னை மர்றும் கோவை மாநகரங்களில் புத்தம் புதிய நச்சுத்தன்மையற்ற சத்தான காய்கறிகளினை அவரவர் மாடிகளில் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க தொழில்நுட்ப அறிவுரையுடன் நீங்களே செய்து பாருங்கள்-சிறுதளைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.(வேளாண்மை மானியக்கோரிக்கை)
நகரங்களில் மண்தொட்டிகள் கிடைப்பது சிரமம் அதற்கு மாற்றாக HDPE GROW BAGS எனப்படும் பிளாஸ்டிக் பைகள் சந்தையில் வெவ்வேறு அளவுகளில் தேவைக்குதக்கவாறு கிடைக்கிறது.மேலும் மண் கிடைப்பது சிரமம் ஆதலால் அதற்கும் மாற்றாக தென்னைநார் கழிவு மண்புழு உரம் கலந்து பயன்படுத்துதல் எளிதானது.எடை குறைவானது.தென்னைநார் கழிவு நன்கு அமுக்கப்பட்டு அதனைச்சேர்த்தே HDPE GROW BAGS சந்தைகளில் கிடைக்கிறது.அதனை பயன்படுத்தலாம்.
மாசற்ற காய்கறிகள் உண்ணவேண்டும் என்பதற்காக HDPE GROW BAGS மூலம் என் வீட்டின் மேல்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத்தோட்டமும் என்வீட்டினைச்சுற்றி அமைக்கப்பட்டுள்ள தாவரங்களும் தற்போது சிறிது சிறிதாக காய்கறிகள் வெளியே வாங்குவதினை குறைத்து வருகின்றன
வீட்டின் மேல்பகுதியில் வளர்க்கப்பட்டு வரும் செடியில் காய்க்கத்துவங்கியுள்ள பாகல் |
வீட்டின் மேல்பகுதியில் வளர்க்கப்பட்டு வரும் செடியில் காய்க்கத்துவங்கியுள்ள பீர்க்கன் |
வீட்டின் மேல்பகுதியில் வளர்க்கப்பட்டு வரும் செடியில் காய்க்கத்துவங்கியுள்ள பாகல் |
தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்பாட்டில்களில் வளர்க்கப்படும் சிறு பூச்செடிகள் |
தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்பாட்டில்களில் வளர்க்கப்படும் மணிபிளாண்ட் |
தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்பாட்டில்களில் வளர்க்கப்படும் ஓமவல்லி அல்லது கற்பூரவல்லி |
தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்பாட்டில்களில் வளர்க்கப்படும் அழகுச்செடி |
தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்பாட்டில்களில் பிரிதொரு முறையில்வளர்க்கப்படும் அழகுச்செடி |
தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்பாட்டில்களில் பிரிதொரு முறையில்வளர்க்கப்படும் அழகுச்செடி |
மாடிதோட்டத்தில் வளர்க்கப்பட்டுவரும் அவரைச்செடி பூக்க காய்க்கத்துவங்கியுள்ளது |
மாடித்தோட்டத்தில் செடிகளின் அணிவகுப்பு |
பயன்படுத்தப்படாத வாளியில் வளர்க்கப்படும் ரோஸ் செடி பூக்கத்துவங்கியுள்ளது |
நந்தியாவட்டைச்செடி பூக்களுடன் |
கேரட் மற்றும் சிறுகிழங்கு |
கேரட் நன்கு விளைந்தநிலையில் |
மிளகாய் பூக்க,காய்க்கத்துவங்கியுள்ளது |
கத்தரி காய்க்க தயாரான நிலையில் |
பீட்ரூட் அறுவடைக்கு தயாரான நிலையில் |
வீட்டுத்தேவைக்கான அரைக்கீரை முளைவிடதுவங்கியுள்ளது |
புதினா நன்கு வளர்ந்த நிலையில் |
பொன்னாங்கண்ணி கீரை அறுவடைக்கு தயார் |
கீரைவகைகளின் அணிவகுப்பு |
வீட்டின் முன்புறம் வைக்கப்பட்டுள்ள மரம் பூத்து குலுங்குகிறது |
வீட்டின் முன்புறம் வைக்கப்பட்டுள்ள மரம் பூத்து குலுங்குகிறது |
குளிர் காற்றினை தரக்கூடிய முள்ளில்லா மூங்கில் |
நீரின் கடினத்தன்மை நீக்க வெட்டிவேர் |
வெட்டிவேரின் அணிவகுப்பு |
மங்குஸ்தான் பழமரம் |
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவல்ல இன்சுலின் செடி |
செவ்வெளனி |
மாமரம் பூக்கத்துவங்கியுள்ளது |
சப்போட்டா |
இன்சுலின் செடி |
பவளமல்லிசெடி |
எளிய முறையிலான சொட்டு நீர் பாசன அமைப்பு |
தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்பாட்டில் சொட்டு நீர் அமைப்பாக |
தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்பாட்டில் சொட்டு நீர் அமைப்பாக |
சமையலறைக்கழிவு நீர் செல்லும் பாதையில் நீர்ன் கடினத்தன்மை அகற்ற கல்வாழை மற்றும் வெட்டிவேர் |
தூக்கி வீசி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களில் சிறு பறவைகளுக்காக தானியங்கள் |
தூக்கி வீசி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களில் பிறிதொரு முறையில் சிறு பறவைகளுக்காக தானியங்கள் |
முயன்றால் முடியாதது ஏதுமில்லை.
முயற்சியுங்களேன்
.தென்னைநார் கழிவு நன்கு அமுக்கப்பட்டு அதனைச்சேர்த்தே HDPE GROW BAGS சந்தைகளில் கிடைக்கிறது.அதனை பயன்படுத்தலாம். எங்கு கிடைக்கும் என்ற விவரம் தந்து உதவ முடியுமா ப்ளீஸ்
ReplyDeleteSathish kumar Natarajan,
ReplyDeleteBusiness Development Officer,
Parisudh Eco Concepts Pvt. Ltd,
No.15, 2nd Main Road,
Karpagam Garden,
Adyar,
Chennai 600 020. TN.
Ph: 044 2491 4366
Email: office@parisudh.com
another one
Arjun tharpalin industries
salem
Phone 9442212345
http://www.arjuntarpaulins.net/
Kailash
Thanks a lot for the info and nice photos.
ReplyDeleteThank You so much
DeleteIt is very marvelous. best wishes and keep it up
ReplyDeleteThank You
Delete