வெட்டிவேர்:-
மூலிகையின் பெயர் -: வெட்டிவேர்.
தாவரக்குடும்பம் -: POACEAE.
தாவரப்பெயர் -: CHRYSOPOGON ZIZANIOIDES.
வேறுபெயர்கள் -: குருவேர், உசிர், வீராணம்.
LandFill ல் வெட்டிவேர் நடப்படுகிறது
வெட்டிவேர் இண்டர்நேஷனல் நெட்வொர்க்கின் வலை முகவரி இங்கே
வெட்டிவேர் புல் இனத்தைச் சேர்ந்தது. இது பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் சிறப்பாக வளரும். நாணல் மற்றும் தர்ப்பைப் புற்களைப் போல்வளரும். இது நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும்.வேர் கொத்துக் கொத்தாக இருக்கும். இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடலாம். இதன் வேர் மணத்துடன் இருக்கும். இது உடலின் வேர்வையும், சிறு நீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி உடலுக்கு உரமாக்கியாகவும் செயல்படுகிறது. இதை ஒரு வருடத்தில் வெட்டி எடுக்கலாம்.வேர் குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது.இதன் பூ ஊதா நிறத்தில் இருக்கும். இதன் வேர் இரண்டு முதல் நான்கு மீட்டர் ஆழம் வரை செல்லும்.இது லெமன்கிரேஸ், பாம்ரோஸா புல் போன்று வளரும். வெட்டிவேர்மண் அரிப்பைத் தடுக்கும்
தாவரக்குடும்பம் -: POACEAE.
தாவரப்பெயர் -: CHRYSOPOGON ZIZANIOIDES.
வேறுபெயர்கள் -: குருவேர், உசிர், வீராணம்.
இந்தியாவில் வருடத்திற்கு சுமார் 5,000,000,000 டன் அளவிற்கு மண் அரிப்பு ஏற்படுவதாக ''வெட்டி வேர் இன்டர்நேஷ்னல் பிளாக்''கூறுகிறது. அதில் 30% கடலிலும், 10% அணைகளிலும் சேர்வதாகவும், 60% இடமாற்றம் அடைவதாகவும் கூறுகிறது. பொதுவாக நீரினால் தான் அதிகம் மண் அரிப்பு எற்படும். இதில் கவனிக்கப் படவேண்டியது, நீர் திரும்ப நீர் சூழற்சி முறையில் மேலே சென்றுவிடும். ஆனால் மண்??? எனவே மண் அரிப்பை தடுப்பது நமது கடமைகளில் முதன்மையாக இருக்க வேண்டும். அதற்கு இன்று உலகம் முழுவதும் ஒரு புல்லையே நம்பியுள்ளது. அது நம் நாட்டின் ''வெட்டிவேர்'' என்றால் பலருக்கு வியப்பளிக்கலாம். ஆனால் உண்மை அதுதான்.பல்வேறு நாடுகளில் மண் அரிப்பைத்தடுக்கவும்,நீரின் கடினத்தன்மை போக்கவும் வெட்டிவேர் பயன்படுத்தப்படுகிறது.ஆனால் நம் நாட்டில் அதனைப்பற்றிய விழிப்புணர்வும் இல்லை பயன்படுத்துதலும் இல்லை.வளர்ந்த நாடுகளில் சாலை பராமரிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு, சுரங்க பகுதிகளில் மண் அரிப்பை தடுத்தல் போன்ற காரியங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
கழிவு நீர் சுத்திகரிக்க வெட்டிவேர் நடப்பட்டுள்ளது |
கரையோரம் மண் அரிப்பைத்தடுக்க வெட்டிவேர் நடப்பட்டுள்ளது. |
வெட்டிவேர் நன்கு வளர்ந்த நிலையில் |
கழிவு நீர் சுத்திகரிக்க வெட்டிவேர் நடப்பட்டுள்ளது |
மண் அரிப்பைதடுக்க வெட்டி வேர் நடப்படுகிறது |
கரையோரம் மண் அரிப்பைதடுக்க வெட்டி வேர் நடப்படுகிறது |
வெட்டிவேர் நன்கு வளர்ந்த நிலையில் |
மண் அரிப்பைதடுக்க வெட்டி வேர் நடப்படுகிறது |
வெட்டிவேர் |
எங்கள் வீட்டு சமையல் அறை கழிவு நீரை சுத்தம் செய்ய நடப்பட்டுள்ள வெட்டிவேர் |
எங்கள் வீட்டு சமையல் அறை கழிவு நீரை சுத்தம் செய்ய நடப்பட்டுள்ள வெட்டிவேர் அணிவகுப்பு |
VERY USEFUL PLANT TO ALL. THANK YOU FOR PUBLISHING. sridhar_kva@yahoo.in
ReplyDeleteThank You so Much.
Deleteusefull information
ReplyDeleteThank you so Much.
Deleteபடங்கள், தகவல்கள் அருமை, இதன் பெயர் வெட்டிவேர் அல்ல வெற்றிவேர்!!
ReplyDeletenalla seithi thank you so Much.
ReplyDelete