இ.எம்.கலவை:-
எபெக்டிவ் மைக்ரோ ஆர்கானிசம் என்பதன் சுருக்கம்தான் இ.எம்.
இத்திரவத்தில் நுண்ணுயிர்கள் உறக்கநிலையில் இருக்கும்.
சிறந்த நுண்ணுயிரிகள் (ஈஎம்) என்றால் என்ன?
நுண்ணுயிரிகள் வெறும் கண்ணுக்கு புலப்படாத அளவுக்கு சிறியதாக இயற்கையில் எல்லா இடங்களிலும் இருக்கும் .சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதில் நுண்ணுயிரிகளின் பங்கு முக்கியமானது. நுண்ணுயிர்களில் ஏற்படும் இரசாயன மாற்றம் மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்கள் வாழ உதவியாக உள்ளது என்றால் அதில் மிகையில்லை.நுண்ணுயிரிகளில் இரண்டுவகை நுண்ணுயிரிகள் உள்ளன.நன்மை தரவல்லவை. தீங்கு தரக்கூடியவை.
ஈஎம் தோற்றம்
ஈஎம் எனப்படுவது கலவையில் நன்மையுள்ள நுண்ணுயிர்கள் உள்ளன என கண்டறிய பயன்படுத்தப்படும் ட்ரேட் மார்க் ஆகும்
ஈஎம் உபயோகம்:-
அன்றாட வாழ்க்கையில் வீட்டில் பயன்படுத்தலாம்
சமையலறை கழிவுகளினை மறுசுழற்சி செய்யவும் மற்றும் மதிப்புமிக்க கரிம பொருள் மாற்றவும் செய்யலாம்
மண் கட்டமைப்பு மேம்படுத்த , உற்பத்தி அதிகரிக்க மற்றும் நோய் மற்றும் களைகள் அழிக்க பயன்படுத்தலாம்
அனைத்து வகையான நீர், காற்று, மற்றும் மண் மாசுபாடு போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தீர்க்க;
விவசாயம் மற்றும் தோட்டக்கலை, பழம் மற்றும் பூ சாகுபடிக்கும்;
கால்நடை வளர்ப்பிற்கு
மீன் வளர்ப்பு,
தனிப்பட்ட உடல் சுகாதாரம் மற்றும் நோய்த்ததடுப்பு மற்றும் சுகாதார பிரச்சினைகளுக்கான சிகிச்சைகள்.
Dr. Teruo Higa அவர்களின் BENEFICIAL AND EFFECTIVE MICROORGANISMS
எபெக்டிவ் மைக்ரோ ஆர்கானிசம் என்பதன் சுருக்கம்தான் இ.எம்.
இத்திரவத்தில் நுண்ணுயிர்கள் உறக்கநிலையில் இருக்கும்.
சிறந்த நுண்ணுயிரிகள் (ஈஎம்) என்றால் என்ன?
1982 ல் Ryukyus பல்கலைக்கழகம், ஒகினவா ஜப்பானினைச்சார்ந்த Dr.Higa இயற்கையாகவே,சில நுண்ணுயிரிகள் கூட்டங்கள் நன்மை செய்கின்ற வகையில் செயல்படுகின்றன என கண்டறிந்தார்.அப்படி கண்டறியப்பட்ட நுண்ணுயிர் கூட்டங்களுக்கு ஈஎம் (சிறந்த நுண்ணுயிரிகள்)என பெயரிட்டார்.
E.M-1. என்பது உறங்கும் நிலையிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் தொகுப்பாகும். E.M-1. நீர்த்த பிறகே பயன்படுத்த வேண்டும். இதனை 1:1:20 என்ற விகிதத்தில் E.M.-1 :வெல்லம்(அ)கரும்பு சர்க்கரை :குளோரின் கலக்காத நீரில் 5-10 நாட்கள் பிளாஸ்டிக் கலன்களில் காற்று புகாமல் நிழலில் நொதிக்க வைக்க E.M-2 தயார். உருவாகும் வாயுவை வெளியேற்ற தினமும் 1 நொடி மூடியை திறந்து மூடவேண்டும். இதுதான் உபயோகத்திற்கு ஏற்றது.
ஈஎம் பூச்சி கொல்லியாக பயன்படுத்துதல்:-
ஈஎம் பூச்சிகளை விரட்டும் கலவையாக பயன்படுத்துதல்:-
ஈஎம் கலவையினை ஒரு இரசாயன கலப்பல்லாத பூச்சிகளை விரட்டும் கலவையாக பயன்படுத்தலாம். இது தோட்டத்தில் பூச்சி மற்றும் நோய் பரவுதலை தடுக்க பயன்படுத்தப்படுகிறது. இது தாவரங்களினைச்சுற்றி ஒரு அரண்போல அமைந்து நோய்தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது.
ஈஎம் கலவை தயாரித்தல்:-
நல்ல வெதுவெதுப்பான
குளோரின் கலக்காத நீர் :- 300 மில்லி
வெல்லப்பாகு :- 50 மில்லி
வினிகர் :- 50 மில்லி
எத்தில் ஆல்கஹால் :- 50 மில்லி
ஈ.எம் திரவ செறிவுகள் :- 50 மில்லி
ஈ.எம் கலவை தயாரிக்க தேவையான அளவிலான கொள்கலனினை எடுத்துக்கொண்டு வெதுவெதுப்பான தண்ணீரில் வெல்லப்பாகு சேர்த்து நன்கு கலந்து பின்னர், வினிகர் சேர்த்து நன்கு கலக்கி அத்துடன் எத்தில் ஆல்கஹால் மற்றும் ஈஎம் சேர்க்க வேண்டும்.பின் கலக்கப்பட்ட கலவையினை பிளாஸ்டிக் பாட்டில்களில் ஊற்றி அதில் நறுக்கப்பட்ட பூண்டு சிறிய அளவில் சேர்த்து பிளாஸ்டிக்பாட்டிலின் முகப்பினை முடிந்தவரை இறுக்கமாக மூடி இருண்ட இடத்தில் வைக்கவேண்டும்.நாள்தோறும் இருமுரையாவது முகப்பினை திறந்து உருவாகும் வாயுக்களினை வெளியேற்ற வேண்டும்.ஒரு இனிப்பு பழ வாசனை வரத்துவங்கி விட்டால் ஈஎம் பயன்படுத்த தயாராக உள்ளது.இக் கலவையினை 3 மாதங்களுக்கு ஒரு சீரான வெப்பநிலை கொண்ட ஒரு இடத்தில் சேமிக்கலாம். பூண்டு சாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றால், சேமிக்கும் முன் வடிகட்ட வேண்டும்.இக்கலவையினை குளிர்சாதன பெட்டியில் சேமிக்க கூடாது.
20 மில்லி ஈ.எம் கலவையினை 2 லிட்டர் சுத்தமான தண்ணீருடன் கலந்து தெளிப்பான் மூலம் பயிர் நனையுமாறு தெளிக்கவேண்டும்.தெளித்தல் பணி விதைகள் உருவாகும் முன்னரே அல்லது செடிகள் உருவாகும் முன்னரே அல்லது நோய்த்தாக்குதல் ஆரம்பமாகும் முன்னரே செய்யவேண்டும்.நோய்த்தாக்குதல் ஆரம்பித்து விட்டால் 30 மில்லி ஈ.எம் கலவையினை 2 லிட்டர் சுத்தமான தண்ணீருடன் கலந்து தெளிப்பான் மூலம் காலை வேளைகளில் தெளிக்கவேண்டும்.
ஈஎம் ஓர் இயற்கை தயாரிப்பு:-
ஈஎம் எனப்படுவது கலவையில் நன்மையுள்ள நுண்ணுயிர்கள் உள்ளன என கண்டறிய பயன்படுத்தப்படும் ட்ரேட் மார்க் ஆகும்
ஈஎம் ஆக்சிஜன் உயிர் வாழ தேவைப்படும் காற்று நுண்ணுயிரிகளும் ஆக்சிஜன் உயிர் வாழ தேவை இல்லாத நுண்ணுயிரிகளும் இணைந்து உள்ளது.
ஈஎம் மண்ணிற்குள் இருக்கும் நுண்ணுயிர்களுடன் ஒன்று சேர்ந்து மண்வளத்தை பாதுகாக்கிறது.
ஈஎம் நச்சு அல்லது நோய் பரப்பக்கூடியதன்று. மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்று சூழலுக்குப் பாதுகாப்பானது.
ஈஎம் பயன்படுத்துதல் மண் , பயிர் வளர்ச்சி மற்றும் தரத்தை மேம்படுத்துகிறது.
ஈஎம் உபயோகம்:-
அன்றாட வாழ்க்கையில் வீட்டில் பயன்படுத்தலாம்
சமையலறை கழிவுகளினை மறுசுழற்சி செய்யவும் மற்றும் மதிப்புமிக்க கரிம பொருள் மாற்றவும் செய்யலாம்
மண் கட்டமைப்பு மேம்படுத்த , உற்பத்தி அதிகரிக்க மற்றும் நோய் மற்றும் களைகள் அழிக்க பயன்படுத்தலாம்
அனைத்து வகையான நீர், காற்று, மற்றும் மண் மாசுபாடு போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தீர்க்க;
விவசாயம் மற்றும் தோட்டக்கலை, பழம் மற்றும் பூ சாகுபடிக்கும்;
கால்நடை வளர்ப்பிற்கு
மீன் வளர்ப்பு,
தனிப்பட்ட உடல் சுகாதாரம் மற்றும் நோய்த்ததடுப்பு மற்றும் சுகாதார பிரச்சினைகளுக்கான சிகிச்சைகள்.
Dr. Teruo Higa அவர்களின் BENEFICIAL AND EFFECTIVE MICROORGANISMS
No comments:
Post a Comment