தீபாவளி:-
தீபாவளி என்றாலே மகிழ்ச்சி தான்.புது ஆடை,பட்டாசு,இனிப்பு வகைகள்.குதூகலமான பண்டிகை.ஆனால் நாம் கொண்டாடும் பண்டிகை நம் எதிர்கால சந்ததியினருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இயற்கையின் படைப்புகளினை அழிக்கும் வகையில் கொண்டாடுவது நியாயமா.சிந்திப்போமா.அதற்காக தீபாவளி கொண்டாட வேண்டாம் எனக்கூறவில்லை.கொண்டாடுவோம் மகிழ்ச்சியாக ஆனால் சுற்றுப்புறத்திற்கு தீங்கு விளைவிக்காத வகையில்.
தீபாவளி பண்டிகையின் போது ஏற்படுகின்ற முக்கிய சுற்றுச்சூழல் பாதிப்புகள்
பட்டாசுகள் மூலம் காற்று மாசு (Air Pollution)
பட்டாசுகள் மூலம் இரைச்சல் மாசு(Noise Pollution)
கேட்மியம் இரத்த சோகை மற்றும் சிறுநீரக பாதிப்பு
ஈயம் நரம்பு மண்டலத்தை பாதிக்கும்
மெக்னிஷியம் தூசி மற்றும் புகைகள் உலோக FUME காய்ச்சலை ஏற்படுத்தும்
சோடியம் தோல்வியாதி
துத்தநாகம் வாந்தி ஏற்படும்
தீபாவளி என்றாலே மகிழ்ச்சி தான்.புது ஆடை,பட்டாசு,இனிப்பு வகைகள்.குதூகலமான பண்டிகை.ஆனால் நாம் கொண்டாடும் பண்டிகை நம் எதிர்கால சந்ததியினருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இயற்கையின் படைப்புகளினை அழிக்கும் வகையில் கொண்டாடுவது நியாயமா.சிந்திப்போமா.அதற்காக தீபாவளி கொண்டாட வேண்டாம் எனக்கூறவில்லை.கொண்டாடுவோம் மகிழ்ச்சியாக ஆனால் சுற்றுப்புறத்திற்கு தீங்கு விளைவிக்காத வகையில்.
தீபாவளி கொண்டாடுவதால் சுற்றுப்புறத்திற்கு என்ன கெடுதல் என்கிறீர்களா?
பட்டாசுகள் மூலம் காற்று மாசு (Air Pollution)
பட்டாசுகள் மூலம் இரைச்சல் மாசு(Noise Pollution)
அளவுக்கதிகமான நுகர்வு(Excessive Consumerism)
பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் வேதியியல் பொருள்களிலால் ஏற்படும் தீய விளைவுகள் :-
பட்டாசுகள் மூலம் காற்று மாசு:-
பெரும்பாலான மக்களுக்கு தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று.தீபாவளி கொண்டாடும் போது பட்டாசு வெடிப்பது என்பது மிகவும் பொருத்தமான அவசியமான ஒன்றாக தெரிகிறது.ஆனால் சிறிய அளவிலான மக்களுக்கு மாசுபட்ட நகரங்களில், பட்டாசுகள் வெடிப்பது தற்காலிக மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது ஆனால் இதனால் ஏற்படும் தீவிர காற்று மாசுபாடு சுற்றுப்புறத்தினை மாசுபடுத்திகின்றன என உணர ஆரம்பித்துள்ளனர். பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் நச்சு பொருட்கள் அனைத்து உயிரினங்களின் ஆரோக்கியத்திற்கு தடையாக உள்ளது.வெளியிடப்படுகின்ற நச்சு வாயுக்கள் சுற்றுப்புறத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன என்றால் அதில் மிகையில்லை. பட்டாசு வெடிப்பதால் உண்டாகும் சத்தம் அதிக அளவில் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு மகத்தான துன்பத்தை ஏற்படுத்தும்.
துரதிர்ஷ்டவசமாக, நாம் பயன்படுத்தும் பட்டாசுகள் பெரும்பாலும் மிக இளம் குழந்தைகளால் செய்யப்படுகின்றன.பட்டாசு தயாரிக்கப்பயன்படுத்தப்படுகின்ற பொருட்களில் மிகவும் நச்சுத்தன்மை இருப்பதால் குழந்தை தொழிலாளர்கள் பலர் உடல்நிலை சரியில்லாமல் நோய்வாய்படுகின்றனர்.மேலும் பட்டாசு தயார் செய்யும் போது விபத்துகளினால் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
வேதியியல் பொருள்கள் விளைவிக்கும் தீங்கு
தாமிரம் சுவாசக்குழாய் எரிச்சல் கேட்மியம் இரத்த சோகை மற்றும் சிறுநீரக பாதிப்பு
ஈயம் நரம்பு மண்டலத்தை பாதிக்கும்
மெக்னிஷியம் தூசி மற்றும் புகைகள் உலோக FUME காய்ச்சலை ஏற்படுத்தும்
சோடியம் தோல்வியாதி
துத்தநாகம் வாந்தி ஏற்படும்
நைட்ரேட் மன அமைதி பாதிக்கப்படும்
நைட்ரைட் புத்தி பேதலித்து கோமா ஏற்படும்
பட்டாசுகள் மூலம் இரைச்சல் மாசு
125 டெசிபலிற்கு மேல் வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டர் தொலையில் ஒலி அளவினை ஏற்படுத்தும் பட்டாசுகளினை வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் ஒலியினால் காது கேளாமை,உயர் இரத்த அழுத்தம்,இருதய கோளாறு,தூக்கமின்மை போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன.
அளவுக்கதிகமான நுகர்வு
மனிதனால் உருவாக்கப்படும் பொருள்கள் அனைத்தும் இயற்கையினால் நமக்கு கிடைக்கும் பொருள்கள் கொண்டே.அதாவது பிளாஸ்டிக்,இரும்பு,துணி இவற்றிற்கான மூலப்பொருள்கள் அனைத்தும் இயற்கையின் மூலமாக நேரிடையாக கிடைக்கின்றன.இந்த மூலப்பொருள்கள் அனைத்தும் நம்மால் உருவாக்க இயலாது.அதாவது இந்த மூலப்பொருள்கள் அனைத்தையும் புதுப்பிக்க இயலாது.புதுப்பிக்க இயலாத இயற்கை பொருள்களின் சிதைவு மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.
நாம் தூக்கி எறியும் திட கழிவான மக்க இயலாத பொருள்கள் நம்மை விட்டு நீஙக அதாவது இயற்கையோடு இரண்டற கலக்க நீண்ட வருடங்கள் ஆகும்.
இயற்கை பாதுகாப்பு ஐந்து கோட்பாடுகளினை உள்ளடக்கியது.இந்த கோட்பாடுகளை வைத்து முக்கியமான நமது இயற்கை சூழலை பாதுகாக்க முடியும் -
குறைக்க : நாம் பயன்படுத்தும் பொருட்கள் அளவைனை குறைப்பது
மறுபயன்பாடு : பயன்படுத்தும் பொருள்களினை அதன் ஆயுற்காலம் முழுதும் பயன்படுத்துவது
மறுபயன்பாடு : பயன்படுத்தும் பொருள்களினை அதன் ஆயுற்காலம் முழுதும் பயன்படுத்துவது
மறுசுழற்சி: மறுசுழற்சி செய்ய இயலும் பொருள்களினை மறு சுழற்சி
செய்வது
மறுபரிசீலனை: நாம் ஏதாவது வாங்க தீர்மானிக்கும் போது தேவையா இந்த பொருள்,என சிந்தனை செய்வது
மறுக்கும்: தேவையின்றி பொருள்களினை வாங்க மறுப்பது.
மறுபரிசீலனை: நாம் ஏதாவது வாங்க தீர்மானிக்கும் போது தேவையா இந்த பொருள்,என சிந்தனை செய்வது
மறுக்கும்: தேவையின்றி பொருள்களினை வாங்க மறுப்பது.
இந்த சிந்தனைகளினை பின்பற்றி அதாவது நினைவினில் நிறுத்தி பண்டிகைகளினை கொண்டாடுவோம்.
உறுதி பூணுவோம்
எதிர்கால சந்ததியினருக்கு இயற்கை வளங்களினை விட்டுச்செல்வோம் என.....
இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDelete