Sunday 14 July 2013

இயற்கை வேளாண்மை -பகுதி 2

இயற்கை வேளாண்மை 

பொள்ளாச்சிக்கு அருகில் திரு மது இராமகிருஷ்ணன் அவர்கள் கடந்த 17ஆண்டுகளாக இரசாயனமில்லா வேளான்மை செய்து வருபவர்
.இயற்கையை பாழ்படுத்த எண்ணாதவர்.இயற்கையோடு இயைந்து இருக்க விரும்புபவர்.இயற்கை வேளாண்மையின் தந்தை திரு மாசானாபு புகோகாவிடம் நேரடி பயிற்சி பெற்று அதனை நடைமுறைபடுத்தியவர்.அவரது தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது காட்டிற்குள் சென்ற உணர்வு.அருமையான சூழ்நிலை.அங்கிருந்து அகல மனமில்லை.அவ்வளவு ரம்மியமான சூழ்நிலை.அவரிடம் பேசியபோது அவரது ஆசான் கூறியதாக சொன்னது மிகவும் கவர்ந்தது.


  • உழுத நிலம் கேட்பதில்லை வனத்தில் முளைக்கும் விதைகள்
  • மழை மண்ணிலிருந்தோ விண்ணிலிருந்தோ உண்டாவதில்லை. அது மரங்களிலிருந்து உண்டாகிறது.
  • இயற்கை வேளாண்மை உலகின் எப்பகுதிக்கும் பொருந்தும்.
  • இயற்கை ஒருபோதும் மாறுவதில்லை.அதை நோக்கும் நமது பார்வைதான் காலத்திற்கு காலம் மாறுபடுகிறது. காலம் எவ்வளவுதான் மாறினாலும் வேளாண்மையின் பாதுகாவலனாக இயற்கை வேளாண்மை விளங்கும்
  • சுற்றுச்சூழல் கெடுவதால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக இயற்கையின் ஒரு பகுதியான மனிதனின் மனமும் மாசு படுகிறது. அதனால், மன இறுக்கம் மற்றும் தீமை பயக்கும் எண்ணங்கள் தோன்றுகின்றன. 
  • நிலம் , நீர் , மரம் , பூச்சி -- இவைகளை அப்படியே விட்டுவிட்டு விளைச்சல் பெரும் வேளாண்மைதான் இயற்கை வேளாண்மை
  • உற்பத்திக்கு பயன்படுத்திய சக்தியை மட்டும் கணக்கிட்டுப் பார்த்தாலே இயற்கை வேளாண்மை மட்டுமே சிறந்த வேளாண்மை என்பது புரியும்
  • எந்த இயற்கைக்குத் திரும்ப மனிதன் ஆசையோடு முயற்சிக்கிறானோ, அந்த இயற்கையின் அடிப்படையே ,மாறி நிரந்தரமாக வேறுபட்டு விட்டால், எப்படி அதை அடைவது?
  • உண்மையான சந்தோஷமான வாழ்க்கையை ஒருவன் இயற்கையோடு இணைந்துதான் அனுபவிக்கமுடியும்.
  • இயற்கைக்கு திரும்புங்கள் அல்லது திருப்பப்படுவீர்கள் 


ஆம்! இன்றைய காலகட்டத்தில் நாம் கட்டாயமாக இயற்கைக்கு திரும்பவேண்டும் அல்லது கண்டிப்பாக திருப்பப்படுவோம்.



மண்புழுக்கள் பற்றிய விவரங்கள் கேட்க கேட்க ஆச்சரியமாக இருந்தது.மண்புழுக்களால அமைக்கப்படும் மைக்ரோ டேம் பற்றிய விவரங்களினை அறிந்தபோது இரசாயான உரங்கள் ஏற்படுத்தும் பாதிப்பு கண்முன் விரிந்தது.அவ்ரது தோட்டத்தில் நடந்து சென்ற போது மண்புழுக்களால் உருவான உரங்களின் மெது மெதுப்பு கால்களில் தடம் பதித்தது.
தோட்டத்தின் ஒரு பகுதி

தோட்டத்தின் ஒரு பகுதி

தோட்டத்தின் ஒரு பகுதி

தோட்டத்தின் ஒரு பகுதி

எங்களினை வரவேற்க அமைக்கப்பட்ட அமைப்பு

எங்களினை வரவேற்க அமைக்கப்பட்ட அமைப்பு

திரு மது இராமகிருஷ்ணன் அவர்கள் இயற்கை அமைப்பினை வீணாக்காமல் தோட்ட பராமரிப்பு குறித்து விளக்குகிறார்

 இயற்கை அமைப்பினை வீணாக்காமல் தோட்ட பராமரிப்பு குறித்த விளக்க படம்

 இயற்கை அமைப்பினை வீணாக்காமல் தோட்ட பராமரிப்பு குறித்த விளக்க படம்












வேண்டாம் இரசாயன உரங்கள்
திரும்புவோம் இயற்கை வேளாண்மைக்கு......

1 comment:

  1. Nice to see kind of article.Keep it up. good effort. will follow you

    ReplyDelete