Tuesday 23 July 2013

மண்புழு உரம்.....

மண்புழு உரம்.....


மண்புழு உரம் இயற்கை நமக்குத்தந்த இனிய வரம் ஆகும்.இயற்கையில் கிடைக்கின்ற கழிவுகளினை உட்கொண்டு அவற்றின் குடல்களில் உள்ள நுண்ணுயிர் மற்றும் நொதிகளினால் செரிக்கப்பட்டு சிறு சிறு உருண்டைகளாக வெளியேற்றப்படும் கழிவுகளே மண்புழு உரம்.

மண்புழு உரத்திற்கும் இரசாயன உரத்திற்கும் என்ன வேறுபாடு.

இரசாயன உரம் மண்ணை மலடாக்குகிறது.
மண்புழு உரம் மண்ணை பலப்படுத்துகிறது.மண் வளத்தினை பாதுகாக்கிறது.தாவரங்களுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கிறது.இயற்கை விவசாயம் மண்புழுக்கள் உதவியுடன் தான் நடைபெறுகிறது.

மண்புழு உரத்தினை 3 முறைகளில் தயாரிக்கலாம்.
1.குழி முறை
2.பெட்டி முறை
3.படுக்கை முறை

 இந்த மூன்று முறைகளில் தயாரிக்கப்படும் உரங்களில் வேறு பாடுகிடையாது.ஆனால் பெட்டி முறையில் மண்புழு உரம் தயாரிப்பது சிறந்தது.

மண்புழு உரப்படுகை
மண்புழுக்கள்

மண்புழு உரம் தயாரித்தல்:

முதலில் நமக்கு தேவையான இடத்தினை சமமாக ஆக்கிக்கொள்ளவும்
அதன் மேல் நன்கு காய்ந்த தேங்காய் கரம்பு அல்லது தேங்காய் நாரினை 
பரப்பவும்.அதன் மீது சாணக்கரைசலை தெளிக்கவும்.பின்பு மக்கிய காய்கறிகழிவுகள்,இலைமக்குகள்,மண்புழுக்கள் எதை எல்லாம் எளிதாகச்சாப்பிடுமோ அதை எல்லாம் அதன் மீது 2 அல்லது 2.5 அடி உயரத்திற்குப்போடவும்,மண்புழுக்களினை போடவும்.அதன் மீது தண்ணீர் தெளிக்கவும்.இரண்டு நாட்கள் அப்படியே விட்டுவிடவும்.ஈரம் காயாமல் பார்த்துக்கொள்ளவும்.

அடிக்கடி தண்ணீர் தெளித்து ஈரமாக வைத்துக்கொள்ளவும்.அதிகம் தண்ணீர் கெடுதலைனை விளைவிக்கும்.நான்கு வாரம் முதல் ஆறு வாரங்களுக்குள் இந்த குவியல் எல்லாம் மக்கிப்போயிருக்கும்.புழுக்களின் எண்ணிக்கைக்குத்தகுந்தார்போல் கழிவுப்பொருள்கள் எல்லாம் மக்குவதற்கு காலம் மாறுபடும்.இப்போது மக்கியகழிவுகள் கருப்பாகவும் எடை குறைந்தும் இருக்கும்.இவை தான் மண்புழு உரம்.அவை பயன்படுத்த தயாராகிவிட்டது.

இப்போது மண்புழு உரம் தயாரிப்புக்கென HDPE தார்ப்பாலின் ஷீட் கொண்ட வெர்மி பெட் (VERMI BED) தற்போது மார்க்கெட்டில் கிடைக்கிறது.அர்ஜூன் தார்பாலின் இண்டஸ் ரீஸ் தாயாரித்து விற்பனைக்கு தருகிறது.வாங்கி பயன் படுத்தலாமே.வீட்டில் சேரும் காய்கறிக்கழிவுகள் மற்றும் இலைக்கழிவுகள் ஆகியவற்றினைக்கொண்டு உரம் தயாரிக்கலாம்.அதனினை வீட்டுத்தோட்டத்திற்கும் பயன்படுத்தலாம்.
அர்ஜூன் தார்பாலின் உற்பத்தியாள்ர்களினை தொடர்பு கொள்ள
முகவரி:-
Sri Arjun Tarpaulin Industries
Arjun Towers, 47, Rajaji Road, Salem - 636007, Tamil Nadu, India
செல் பேசி:-+919442212345

இயற்கையினை பாதுகாப்போம். குப்பைகள் உருவாவதைக்குறைப்போம்

No comments:

Post a Comment