குப்பையிலிருந்து மின்சாரம்-ஆற்காடு நகராட்சி
வேலூர் மாவட்டம் ஆற்காடு நகராட்சியில் மட்கக்கூடிய குப்பைகளினைக்கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.தமிழகத்திலேயே முதன் முறையாக தன்னிறைவுத்திட்டத்தின் கீழ் சுமார் 45 இலட்சம் மதிப்பீட்டில் மீத்தேன் கேஸ் உற்பத்தி செய்யப்பட்டு அதனினைக்கொண்டு ஜெனரேட்டர் இயக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.இதன் மூலம் குப்பைகள் எளிதாக அகற்றப்படுவதுடன்,மின்சாரப்பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் அமைகிறது.
55917 மக்கள் தொகை கொண்ட 7.49 சதுரகிலோமீட்டர் பரப்பளவும் கொண்ட ஆற்காடு நகராட்சியில் சேரக்கூடிய மார்க்கெட் குப்பைகள்,ஹோட்டல் கழிவுகள்,மாமிசக்கழிவுகள் ஆகியவற்றினைக்கொண்டு தன்னிறைவுத்திட்டம் மூலம் 45 இலட்சம் மதிப்பீட்டில் மெயில்ஹெம் என்ற நிறுவனத்தின் மூலம் பொதுமக்கள் பங்களிப்புத்தொகை ரூ 23 இலட்சத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் 265 முதல் 285 யுனிட் மின்சாரம் தினமும் உற்பத்தி செய்யப்படுகிறது.267 தெருவிளக்குகள் சுமார் 10 மணி நேரம் ஒளிர வைக்கப்படுகின்றன.
மற்ற நகராட்சிகளிலும் சிறிய அளவிலாவது இத்திட்டம் செயல்படத்தொடங்கினால் குப்பை பிரச்சனை மற்றும் மின்சார பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
முகப்புத்தோற்றம் |
முகப்புத்தோற்றம் |
மண்புழு உரக்கிடங்கு |
ஜெனரேட்டர் ரூம் |
மட்கும் குப்பைகள் அரைக்கும் இடம் |
குப்பைகளினை பிரித்து அரைத்து அனுப்பும் இடம் |
குப்பைகளினை பிரித்து அரைத்து அனுப்பும் இடம் |
செயல்பாட்டு வரைபடம் |
திட்ட விளக்க குறிப்பு |
திட்ட விளக்க குறிப்பு |
செயல்பாட்டினை ஆணையர் விளக்குகிறார் |
ஆணையர் அவர்களின் செயல் விளக்கம் |
குப்பைகள் அரைபடுதல் |
அரைக்கப்பட்ட மட்கும் குப்பைகள் |
மீத்தேன் கேஸ் அடைக்கப்படும் பலூன் |
மீத்தேன் கேஸ் பலூன் |
ஜெனரேட்டர் |
முகப்புத்தோற்றம் |
No comments:
Post a Comment