Monday, 22 July 2013

உண்ணும் முன் ஒரு கணம் எண்ணுங்கள் -சர்க்கரை

உண்ணும் முன் ஒரு கணம் எண்ணுங்கள் -சர்க்கரை (சீனி)


நாள் தோறும் நாம் உண்ணும் பொருள்களான காப்பி,தேநீர்,சாக்லேட்,இனிப்பு பலகாரங்கள் ஆகியவற்றில் சீனி என்றும் சர்க்கரை என்றும் அழைக்கப்படுகின்ற அஸ்கா சர்க்கரை பயன்படுத்துகின்றோம்.ஆனால் இந்த வெள்ளைச்சீனி நமது உடல் நலத்திற்கும் மன நலத்திற்கும் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்று எண்ணிப்பார்ப்பதில்லை.சீனியின் வரலாற்றினையும் அது பிறக்கும் முன் எத்தனை விதமான ரசாயனக்கலவைகளில் குளித்து வருகிறது என்பதை நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.அப்போது தான் சீனியின் உண்மையான குணத்தினை அறிந்து கொள்ளமுடியும்.கரும்பிலிருந்து பிழியப்பட்ட சாறுடன் ஏழு நிலைகளில் பல்வேறு வேதிப்பொருள்கள் ,அமிலங்கள் பயன்படுத்தப்பட்டு உருவாக்கப்படுகின்றது.அவையாவன

1.அமோனியம் பை புளூயிடு பாக்டீரியா
2.பாஸ்போரிக் அமிலம்
3.சுண்ணாம்பு நீர்
4.சல்பர் டை ஆக்ஸைடு
5.பாலி எலக்ரோலைட்
6.காஸ்டிக் சோடா,சலவை சோடா
7.சோடியம் கைட்ரோ சல்பைட்

இவ்வாறு ஏழு நிலைகளில் கருப்புச்சாறுடன் வினை புரிகின்ற இந்த நச்சுப்பொருள்கள்யாவும் இறுதியில் கழிவாக போய்விடுகின்றதா? என்றால் இல்லை.சல்பர் டை ஆக்ஸைடு ஆர்சனிக் என்ற பொருளும் சீனியுடன் கூடவே தங்கி விடுகிறது.ஆறு மாதம் கழித்து வெள்ளைச்சீனி இளமஞ்சள் நிறமாக மாறிவிடுகிறது.இந்த இளமஞ்சள் சீனியில் தான் ஆபத்துல் நச்சுத்தன்மையும் அதிகம் உள்ளது.இனிப்பு பண்டங்கள் செய்து நாளாகி விட்டாலும் இதே போன்ற நிலை ஏற்பட்டு நச்சுத்தன்மை உருவாகிறது.இது மெல்லகொல்லும் நஞ்சாகும்.நஞ்சாகி விட்ட அதாவது இளமஞ்சள் நிறமாகிவிட்ட சீனியின் நிறத்தை மறைக்க இனிப்பு பண்டங்களுக்கு பல்வேறு வண்ணங்கள் கொடுக்கின்றனர்.கடைகளில் விற்கப்படும் இனிப்புகளில் கிலோ ஒன்றிற்கு  கிராம் வெள்ளைச்சீனி உள்ளது.



அரைக்கப்பட்டு பாகாக மாற்றப்படுகிறது

பாகு உருவாகிறது

சர்க்கரையாக மாற்ற சுண்ணாம்ம்புக்கரசல் சேர்க்கப்படுகிறது

பாகுவுடன் வேதியியல் பொருள்கள் சேர்க்கப்படுகின்றது

சர்க்கரையாக மாற்றப்படுகிறது

சர்க்கரையாக மாற்றப்படுகிறது
சர்க்கரை 


மூட்டையாக கட்டப்படுகின்றது

         
சாதாரணமாக கரும்பை நாம் கடித்து சுவைத்து சாப்பிடுகின்றோம்.அப்போது நேரிடையாக உட்கொள்ளும் கருப்புச்சாறு எவ்வித நச்சுத்தன்மையும் ஏற்படுத்துவதில்லை.கருப்புச்சாறு நமது குடலிலும் உடலிலும் எளிதாகச்சேருவதற்கும் செரிமான மண்டலத்தில் எளிமையாக வளர்சிதை மாற்றம் சிறப்பாக நடைபெறவும் பல வினையூக்கிகளினை இயற்கையே சாற்றினுள் சேர்த்து வைத்துள்ளது.அப்படிப்பட்ட மருந்தாகும் சத்துக்களையே சுத்தம் செய்வது என்ற பெயரால் நாம் கழித்து குப்பைகளில் கொட்டுகிறோம் என்பதே உண்மை.இந்த குப்பைகளே மொலாசஸ் ஆகும்.இந்த மொலாசஸ் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்துகின்றோம்.

சீனி தயாரிப்புக்கு ஆலை அமைத்தது அமெரிக்கா.சீனியை மக்கள் அறியாமலும் உண்ணாமலும் வாழ்ந்தகாலத்தில் சர்க்கரை நோய் அங்கொன்றும் இங்கொன்றுமாக மிகக்குறைவாகவே காணப்பட்டது.ஆனால் இன்றோ எங்கெங்கு காணினும் சர்க்கரை நோய் பரவி நிற்கிறது.நீரிழிவு நோய் வந்த பிறகு சீனி சாப்பிடாதே என்று தடைபோடும் மருத்துவர்கள் இதை நோய்வரும்முன்பே கூறுவதில்லை.ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் சீனியைப்பற்றி ஆய்வு மேற்கொண்டது.இந்த ஆய்வினை யு என் யு விற்காக ஆஸ்லோ பல்கலைக்கழகம் மேற்கொண்டது.டாக்டர் டேக்பொலிசின்ஸ்கி என்ற மருத்துவ வல்லுநரின் குழு இவ்வாராய்ச்சியில் மேலும் புதிய தகவல்களினைத்தந்தது.நல் மற்றும் நல் என்ற இரு நச்சியியல் வல்லுனர்கள் நஞ்சான சீனி பற்றி பல கண்டுபிடிப்புகளினை தந்துள்ளனர்.நாம் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

சீனி நமது இரப்பைக்குச்சென்ற பிரகு அது பிரிந்து வளர்சிதை மாற்றத்திற்கு உட்பட்டு உடலில் தன்மயமாவதற்கு வேண்டிய வினையூக்கிகள் ஏதும் சீனியில் இல்லை.அது 99சதவீதம் மாவுப்பொருளேயாகும்.ஆகவே ரத்தத்திலும் எலும்புகளிலும் இன்ன பிற உட்பகுதிகளிலும் சேமிப்பில் இருக்கின்ற கால்சியம்,வைட்டமின்”பி”,சோடியம்,பொட்டாசியம் போன்ற தாதுக்களை சீனி சுரண்டி எடுத்துக்கொண்டு வருகிறது.ஏனெனில் இவை இல்லாமல் சீனி நமது உடலில் கரைந்து சேர முடியாது.எனவே இரத்தத்தில் அமில,கார சமச்சீர் நிலை குறைவு ஏற்படுகிறது.இதுவே நாளடைவில் சர்க்கரை நோயாக உருவெடுக்கிறது.சீனி முழுவதுமாக செரிக்கப்படுவதில்லை.எனவே இரைப்பை மற்றும் குடல்களில் வெள்ளைச்சீனி தங்கி விடுகிறது.இதனால் குளுடமிக் அமிலமும் மற்றைய “பி” வைட்டமின்களும் அழிக்கப்பட்டுவிடுகிறது.இதனால் லேக்டிக் அமிலம் போன்ற நச்சுப்பொருள்கள் நரம்பு மண்டலத்தில் அதிகமாகிறது.மூளைச்செல்களுக்கு வேண்டிய ஆக்சிசன் செல்வதைத்தடுக்கிறது.இதனால் அதிகமான சோர்வு,மன அழுத்தம்,மனதளர்ச்சி,குறைந்த இரத்த அழுத்தம்,எதிலும் கவனம் செலுத்த இயலாமை,பல் எனாமல் கெடுதல் போன்ற பல்வேறு கோளாறுகள் தோன்றுன்றன.

பழைமைக்கு திரும்புவோம்.தவறேதும் இல்லை.

கருப்பட்டி,கரும்பு வெல்லம் பயன்படுத்துவோம்

சீனிக்கு விடை கொடுப்போம்

நன்றி.
திரு கோமதிநாயகம் அவர்கள்
இயற்கை விவசாயி
விவசாய சேவாநிலையம்
புளியங்குடி

Download this post as PDF




No comments:

Post a Comment