தொழிற்சாலைகளினால் சுற்றுச்சூழல்
பாதிப்பு....
வளர்ந்த நாடுகளில் ஒரு
தொழிற்சாலையை கட்டுவதற்கு முன்பு அதனால் வரும் லாபத்தைவிட, அதன்மூலம் உண்டாகும் பாதிப்புகளை மதிப்பீடு செய்ய வேண்டும்
.குறிப்பாக சுற்றுசூழல் காரணிகளான காற்று ,நிலம் மற்றும் நீர் போன்றவைகள் பாழ்படகூடாது என்பது ஒரு கட்டளை
மாதிரி. குறிப்பிட்டு
சொல்ல வேண்டுமெனில் இந்த தொழிற்சாலையால்,
- அதை நெருங்கி உள்ள சுற்றுசூழலில் உண்டாகும் பாதிப்பு
-பக்கத்தில் உள்ள நிலப்பகுதியில் இருக்கும் தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் உண்டாகும் பாதிப்பு
- இந்த தொழிற்சாலை கழிவால் ,கடல் மற்றும் கடல் வாழ் உயிரினங்களுக்கு உண்டாகும் பாதிப்பு
- இந்த தொழிற்சாலையால், பக்கத்தில் இருக்கும் சுற்றுலா ஸ்தலத்திற்கும், வரலாற்று சின்னங்களுக்கும் உண்டாகும்
பாதிப்பு
-இந்த தொழிற்சாலையால் ,சரணாலயங்களுக்கு உண்டாகும் பாதிப்பு
இவற்றையெல்லாம் ஆராய்ச்சி செய்து , பாதிப்பில்லை என்று உறுதி செய்தால் தான், அந்த தொழிற்சாலை கட்டவே "முதல்
அனுமதி" கொடுப்பார்கள். அப்படியே பாதிப்புகள் உண்டானாலும் அதை சரிசெய்ய
திட்டம் தீட்டுவார்கள்.வளர்ந்த நாடுகளில் இந்த "சுற்றுசூழல் அனுமதி"
வாங்குவதற்கே பல மாதங்கள் ஆகும். ஏன் என்றால் , ,அவர்கள் அவ்வளவு "Strict". நாட்டின் மீது அக்கறை .அப்படிப்பட்ட சட்டம் நம்
நாட்டில் இல்லை என நினைத்து விடாதீர்கள்.நம் நாட்டில் உண்டு.
EIA(சூழற் தாக்க மதிப்பாய்வு) எனப்படும் Environmental Impact Assessment.எப்படி நடத்தப்படவேண்டும்
என்பது குறித்தெல்லாம் வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளது.எல்லாம் சட்ட
வடிவிலேதான்.
சூழல் தாக்க மதிப்பாய்வு (Environmental impact assessment) என்பது, மனிதனுடைய சூழல்சார் உடல்நலத்தில்
ஏற்படக்கூடிய தாக்கம், வாழ்சூழல் நலம் (ecological health) மற்றும் இயற்கையின்
சேவைகளில் (nature's services)
ஏற்படக்கூடிய
மாற்றங்கள் ஆகியவற்றில் ஒரு குறிப்பிட்ட திட்டம் கொண்டிருக்கக்கூடிய தாக்கங்களை
மதிப்பாய்வு செய்தல் ஆகும். திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பான தீர்மானம்
எடுப்பவர்கள், அதற்குமுன், அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக்
கவனத்தில் கொள்வதற்கு உதவுமுகமாகவே இந்த மதிப்பாய்வு மேற்கொள்ளப்படுகின்றது.
சூழலியல் காரணிகளால், மனித உடல் நலத்தில் ஏற்படக்கூடிய
தாக்கங்கள் பற்றி அறிவதற்கு, செல்வழிப்
பகுப்பாய்வு (pathway
analysis) முறையைப் பயன்படுத்துவதில், ஐக்கிய அமெரிக்க சூழல் பாதுகாப்பு முகமை (US Environmental Protection Agency) முன்னோடியாக
இருந்தது. இந்தப் பகுப்பாய்வுக்கான தொழில்நுட்பம், சூழல் அறிவியல் (environmental science) எனப்பட்டது. முன்னணித் தோற்றப்பாடுகள் அல்லது
தாக்கம் ஏற்படுவதற்கான வழிகள்:
மண் மாசடைதல் தாக்கங்கள்,
வளி மாசடைதல் தாக்கங்கள்,
சத்தம்சார் உடல்நலத் தாக்கங்கள்,
வாழ்சூழலில் ஏற்படக்கூடிய தாக்கங்கள்,
அழியும் நிலையிலுள்ள உயிரினங்கள் தொடர்பான
மதிப்பாய்வு,
நிலவியல் ஆபத்துக்கள் மதிப்பாய்வு,
நீர் மாசடைதல் தாக்கங்கள்.
சூழல் தாக்க மதிப்பாய்வுக்குப் பின்னர், ஏற்படக்கூடிய பாதிப்புக்களைத் தடுப்பதற்கு, கட்டுப்படுத்துவதற்கு, கடுமையான பொறுப்பு அல்லது காப்புறுதி
நிபந்தனைகளை விதிப்பதற்கு, முன்னெச்சரிக்கைக்
கொள்கை, மாசுபடுத்துவோர்
ஈடுசெய்தல் கொள்கை என்பவற்றைப் பயன்படுத்த முடியும்.
சூழல் தாக்க மதிப்பாய்வு சில சமயங்களில்
சர்ச்சைக்கு உரியதாக அமைவதுண்டு. சமூகத் தாக்கங்கள் தொடர்பான பகுப்பாய்வு, சமூகத் தாக்க மதிப்பாய்வு மூலமும், வணிகத்துறைத் தாக்கங்கள் தொடர்பான
பகுப்பாய்வு, சூழ்நிலைப்
பகுப்பாய்வு மூலமும், வடிவமைப்புத்
தாக்கங்கள் தொடர்பான மதிப்பாய்வு சூழ்நிலைக் கோட்பாட்டின் மூலமும்
செய்யப்படுகின்றன.
ஆனால் நம்நாட்டில் சூழல் தாக்க மதிப்பாய்வு
ஆளும் வர்க்கத்தின் கண் அசைவிற்கு ஏற்ப இயற்றப்படுகின்றன.ஆம் மதிப்பாய்வு
செய்யப்படுவதில்லை.
ஏன் சேது சமுத்திரத்திட்டத்தினையே
எடுத்துக்கொள்ளுங்கள்.ஒரு ஆட்சி நடக்கும் போது ஒருவிதமாகவும் மறு ஆட்சி செய்யும்
போது மறுவிதமாகவும் இயற்றப்படுகின்றன.
கூடங்குளம் அணு உலை ஆரம்பிக்கபடும் முன்பு
சூழல் தாக்க மதிப்பாய்வு (Environmental
impact assessment) செய்யப்படவில்லை என்பது ஏற்றுக்கொள்ளமுடியவில்லை எனினும்
உண்மை.அப்படி செய்யப்பட்டிருந்தால் அணுக்கழிவுகளினை எங்கு எப்படி அகற்றுவது என்பது
குறித்து சரியான திட்டமிடல் இருந்திருக்கும்.அகற்றப்படும் இடம் கோலார் தங்கவயல்
என்பதும்,இல்லை இல்லை என
மத்திய அமைச்சர்கள் பல்டி அடிப்பதும் தவிர்க்கப்பட்டிருக்கும்.
எதற்கெடுத்தாலும் அமெரிக்கா என
மேற்கோள்காட்டும் நாம், அந்நாட்டில் EPA எனப்படும் ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல்
பாதுகாப்பு நிறுவனம் இயங்கிவருகிறது.இது சூழல் தொடர்பாக அறிக்கைகளை வெளியிடுவதுடன்
ஆராய்ச்சி மற்றும் கற்கைநெறிகளை ஏற்படுத்துகிறது.ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல்
பாதுகாப்பு நிறுவனம் தன்னிச்சையான அமைப்பு.அதன் முடிவுகளில் எந்த குறுக்கீடும்
இருக்காது. ஆனால் இங்குநம் நாட்டில் ஒரு சில நாட்களிலேயே ,ஒரு சில பேரை சந்தித்து ,சில கோடிகளை கொடுத்து வாங்கிடலாம் இந்த
தொழில்சாலை அனுமதியை..... சுற்றுசூழலையும், நாட்டு அடையாளங்களையும் சிறுக சிறுக அழிக்கும் அந்த அனுமதியால்
எத்தனை கோடி ரூபாய் திருப்பபடமுடியாத நட்டம் ?? பல இடங்களில் நிலத்தடி நீர் ,கழிவு நீரைவிட மோசமாக இருக்கிறது. தண்ணீரும் ,நிலமும் நஞ்சாகி நம் நாடு விவசாயம் செய்ய
தகுதியற்ற நாடாகி கொண்டிருக்கிறது .இந்த விஷ தண்ணீரெல்லாம் கடலில் கலக்கும் போது
அங்கே எப்படி மீன்களும் மற்ற கடல்வாழ் உயிரனங்களும் வாழும் ? இன்னும் சில வருடங்களில் நம் மீனவர்கள் நம்
நாட்டு எல்லைகளில் மீன் பிடிக்க இயலாது.சர்வதேச எல்லையைத்தாண்டிதான் மீன் பிடிக்க
முடியும்.
நாட்டின் வளர்ச்சிக்கும் பொருளாதார
முன்னேற்றத்திற்கும் தொழிற்சாலைகள் அவசியம்.ஆனால் சுற்றுச்சுழலினை பாழ்படுத்தும்
வகையில் அமையாமல் இருப்பது அதனினும் மிக முக்கியமன்றோ.
இந்த தொழிற்சாலைகளின் பொறுப்பற்ற தன்மைகளை
எதிர்க்க, ஒருங்கிணைவோம்
.சுற்றுச்சூழல் காப்போம்.எதிர்கால சந்ததிகளுக்கு நாம் அனுபவிக்கின்ற இயற்கை
வளங்களினை விட்டுச்செல்வோம்.
No comments:
Post a Comment