ஒன்று படுவோம் போராடுவோம்...(BRAI) முடிவினை எதிர்ப்போம்
நம் எதிர்ப்பு ஆட்சியாளர்களின் கண்களினை திறக்கட்டுமே.
1.Unconstitutional, unethical, unscientific, The Hindu, December 28, 2011.
2.A joint campaign against GM crops, Biotechnology Bill, The Hindu, June 26, 2013.
3.Internet role in Egypt's protests, BBC news, February 9, 2011.
விவசாய நாடான நமக்கு விவசாய தொழிற்நுட்பங்கள் என்ற பெயரில் மேலை நாட்டு விதைஉற்பத்தியாளர்கள் விவசாயம் கற்றுக்கொடுக்க புறப்பட்டுள்ளார்கள்.எதைப்பற்றியுமே அக்கறையில்லாத நம் நாட்டு அரசியல்வாதிகளும் மேலைநாட்டு அதிகாரவர்க்கத்திற்கு துணைபோய் அந்நாடுகளின் அறிவுறுத்தலுக்கிணங்க புதியதாக இந்திய உயிரி தொழில் நுட்ப ஒழுங்காற்றமைப்புச்சட்டம் 2013 என்ற கறுப்புச்சட்டத்தினை நிறைவேற்ற கங்கனம் கட்டித்திரிகின்றது நம் இந்திய அரசு.
நாம் என்ன சாப்பிடவேண்டும் என முடிவெடுப்பது இனி இந்த மேலைநாட்டு விதைஉற்பத்தியாளர்கள் கையில் ஒப்படைக்க தயாராக உள்ளது இந்த கறுப்புச்சட்டம்.மரபணுமாற்றுப்பயிர்களுக்கு எதிர்ப்பே இல்லாமல் செயவதற்காக இந்திய உயிரி தொழில் நுட்ப ஒழுங்காற்றமைப்புச்சட்டம் 2013 என்ற பெயரில் இந்தியாவை அடிமைப்படுத்தும் பணியைச்செய்ய தயாராகிவருகிறது இந்திய அரசு.மக்களுக்காக அரசாங்கம் என்பது போய் அரசாங்கம் பணத்திற்காக இந்திய மக்களையே காவு கொடுக்க தயாராகிவிட்டது.
மரபணு மாற்றுத் தொழில்நுட்பம்' இந்தியாவில் வலுவாக காலுன்றிவிட வேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன், மத்திய அரசு அவ்வப்போது இம்மாதிரியான கறுப்புச்சட்டங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், அவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிடவே மத்திய அரசு நினைக்கிறது. இப்போதுகூட இந்த புதிய சட்ட முன்வரைவு அறிமுகம் செய்யப்பட்டதுமே... பீகார், மேற்கு வங்காளம், ஒரிஸ்ஸா, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், கேரளா, கர்நாடகா ஆகிய 7 மாநிலங்கள் மரபணு மாற்றுப் பயிர் கள ஆய்வுக்கு மறுப்பு தெரிவித்துள்ளன. ஆனால், அதையெல்லாம் அலட்சியம் செய்யவே நினைக்கிறது மத்திய அரசு.
இந்தச் சட்டம் நிறைவேறினால்... மாநில அரசுகளின் அதிகாரம் பறிபோய்விடும் என்பதே உண்மை. 'மாநில உயிரித் தொழில்நுட்பக் கட்டுப்பாடு ஆலோசனைக் குழு’ மூலம், ஆலோசனைகளை மட்டும்தான் மாநில அரசால் வழங்க முடியும். இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும்போது, இதற்கு எதிராக, மாநில அரசு உருவாக்கிய எல்லா சட்டங்களும் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும்.
உயிரின வளத்தைப் பாதுகாப்பதற்கான பன்னாட்டு மாநாட்டில் உருவான விதிகளின்படி, 'மரபணு மாற்று உயிரினங்கள் குறித்தவற்றில் முடிவெடுக்கும் செயல்பாட்டில் பொதுமக்களின் பங்கேற்பு இருக்க வேண்டும்’ என்கிறது. ஆனால், புதிய சட்டத்தில் இதற்கான வழிமுறைகள் இல்லை.
காலம்காலமாக பயிரிட்டு மறு விதைப்பிற்கென விதைகளினை எடுத்துவைத்து பயன்படுத்திவந்த நம்மை, விதைகளினை மரபணு மாற்றப்பட்ட விதைகளினை மான்சாண்டோ போன்ற விதை உற்பத்தியாளர்களிடம் வாங்கும் வகையில் அவர்களினை பலப்படுத்தும் வகையில் விதை உற்பத்தியாளர்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு வியாபார தந்திரம் தான் இந்திய உயிரி தொழில் நுட்ப ஒழுங்காற்றமைப்புச்சட்டம் 2013.
''மரபணு மாற்றுத் தொழில்நுட்பம்” என்பது அடிப்படையில் ஆபத்தான ஒன்று. நவீன உயிரித் தொழில்நுட்பத்திடமிருந்து எல்லா உயிரினங்களின் ஆரோக்கியத்தையும்... இந்தியாவின் இயற்கை வளப் பாதுகாப்பையும் நாம் உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதற்காக நாம் எதிர்பார்ப்பது... 'தேசிய உயிரினப் பாதுகாப்பு ஆணையம்’ (National Bio safety Protection Authority)என்கிற அமைப்பைத்தான்'' என்று கூறும் சென்டர் ஃபார் சஸ்டைனபல் அக்ரிகல்ச்சர் (Centre for Sustainable Agriculture) அமைப்பின் ஆலோசகர் கவிதா குர்கந்தி கருத்து மிகவும் யோசிக்க வேண்டிய ஒன்றாகும்.
ஆகஸ்ட் 8 இல் டெல்லியில் இந்திய உயிரி தொழில் நுட்ப ஒழுங்காற்றமைப்புச்சட்டம் 2013க்கு எதிராக உள்ளோம் என்பதினை அரசுக்குத்தெரிவிக்கும் வகையில் பல்லாயிரக்கணக்கானோர் கூடி முழக்கம் இட உள்ளனர்.நாம் நேரிடையாக இந்த சுதந்திரபோரில் பங்கு கொள்ளமுடியவில்லை எனினும் இணையம் மூலமாகவாவது நம் எதிர்ப்பினை பதிவு செய்வோமே..
நம் எதிர்ப்பு ஆட்சியாளர்களின் கண்களினை திறக்கட்டுமே.
எதிர்ப்பினை பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள்
இதனையும் பாருங்கள்:
1.Unconstitutional, unethical, unscientific, The Hindu, December 28, 2011.
2.A joint campaign against GM crops, Biotechnology Bill, The Hindu, June 26, 2013.
3.Internet role in Egypt's protests, BBC news, February 9, 2011.
No comments:
Post a Comment