Saturday, 3 August 2013

பஞ்ச கவ்யா.....

பஞ்ச கவ்யா.....

தொழிற்நுட்பம் வளராத காலத்தே நம் முன்னோர்கள் அனைத்து விதங்களிலும் தேர்ச்சி பெற்று கால மாற்றத்தினை சூரிய ஒளி விழும் நிழலினை வைத்தே அறிந்து அதனடிப்படையில் விவசாயம் முதலான பணிகளினை மேற்கொண்டனர்.அக்காலத்தே  அவர்கள் பயன்படுத்திய நோய்விரட்டி மற்றும் பக்கவிளைவில்லாத மருந்து பொருள் பஞ்சகவ்யம்.

கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சகவ்யம் சிறந்த நோய் எதிர்ப்புசக்தி பெற்றது.அக்காலத்தே நம்முன்னோர்கள்  பஞ்சகவ்யம் பயன்படுத்தி வந்துள்ளனர்.இன்றைய தொழிற்னுட்ப வளர்ச்சியில் அறிவியலாளர்கள் பஞ்சகவ்யம் சிறந்த மருந்துப்பொருள் என அறிவித்துள்ளனர்.

பஞ்சகவ்யம்:

பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களான பால், தயிர், நெய், கோமியம் மற்றும் சாணம் (ஆ ஐந்து என்கிறது திருமுறை) ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுவதே பஞ்ச கவ்யம் ஆகும்.

செய்முறை:-

சுமார் 10 லிட்டர் தயாரிக்க தேவையான பொருள்கள்

பச்சை பசு சாணம்                               :-  2.5 கிலோ
பசு மாட்டு சிறுநீர்                                :- 1/2 லிட்டர்
பசு மாட்டு பால்                                     :- 1 லிட்டர்
பசு மாட்டு தயிர்(நன்கு புளித்தது   :-1 லிட்டர்
பசு மாட்டு நெய்                                     :-1/2 லிட்டர்

பச்சை பசு சாணி 2.5 கிலோவுடன் பசு மாட்டு நெய் 1/2 லிட்டர் கலந்து பிசைந்து மண்பானையிலோ அல்லது பிளாஸ்டிக் வாளியிலோ 3 நாட்கள் வைக்கவேண்டும்.தினமும் நன்கு பிசைந்து கிளறி விடவேண்டும்.நான்காவது நாள் பிற பொருள்களினை போட்டு நன்குகலக்கி கம்பி வலையால் மூடி நிழலில் வைக்க வேண்டும்.தினமும் குறைந்த பட்சம் ஒருமுறை நன்கு கலக்கி விடவேண்டும்.அதிகம் கலக்கும் போது காற்றோட்டம் அதிகம் ஏற்பட்டு நுண்ணுயிர்கள் அதிகம் ஏற்பட்டு மிகுந்த பலன் கொடுக்கும்.
இப்படி 15 தினங்கள் வைத்து வந்தால் பஞ்ச கவ்யம் தயாராகிவிடும்.இதனை ஆறு மாதம் வரை நன்கு கலக்கி வைத்து கெடாமல் பாதுகாக்கலாம்.நாட்கள் அதிகமான கலவைக்கு நல்ல பலன் உண்டு.

பஞ்ச கவ்யம்  நல்ல பேரூட்ட சத்துக்களும்,நுண்ணூட்டச்சத்துக்களும்,நுண்ணுயிர்சத்துக்களும்,பய்ர்வளர்ச்சி ஊக்கிகளும்,மிகுந்த அளவில் உள்ள நல்ல உயிர் உரமாகும்.

பஞ்சகவ்ய மூலப்பொருள்களில் உள்ள சத்துக்கள்:

பச்சை பசு சாணம்                               :-  பாக்டீரியா,பூஞ்சாணம்,நுண்ணுயிர்                                                                                           சத்துக்கள்
பசு மாட்டு சிறுநீர்                                :-பயிர் வளர்ச்சிக்குத்தேவையான                                                                                                  தழைச்சத்துக்கள்(நைட்ரஜன்)
பசு மாட்டு பால்                                     :-புரதம்,கொழுப்பு,மாவு,அமினோ அமிலம்,
                                                                        கால்சியம் சத்துக்கள்
பசு மாட்டு தயிர்(நன்கு புளித்தது   :-ஜீரணிக்கத்தக்க செரிமான தன்மையை                                                                                     தரவல்ல நுண்ணுயிர்கள்
பசு மாட்டு நெய்                                     :-வைட்டமின் ஏ,வைட்டமின்                                                                                                           பி,கால்சியம்,கொழுப்புகள்

பயன்படுத்தும் முறை:

100 லிட்டர் நீருக்கு 3 லிட்டர் கரைசல் அல்லது 10 லிட்டர் நீருக்கு 300 மில்லி அளவில் கலந்து இலைவழி தெளி உரமாக காலை அல்லது மாலை வேலைகளில் எல்லா பயிர்களுக்கும் தெளிக்கலாம்.ஒரு ஏக்கருக்கு 3 லிட்டர் பஞ்சகவ்யம் தேவைப்படும்.இந்த கரைசலை நிலவள ஊக்கியாகவும் பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment